நடிகர்கள்தான் ஒன்னா போவாங்களா?.. நாங்களும் போவோம்.. ஒரே டீ கடையில் இசையமைப்பாளர்கள்.. கலக்கும் ஏஐ

சென்னை: ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் இப்போதைய சூழலில் அதனை வைத்து பல விஷயங்களை ரசிகர்களே செய்துவருகிறார்கள். நேற்று கோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்டோரை வைத்து சில புகைப்படங்களை உருவாக்கியிருந்த சூழலில்; இன்று இசையமைப்பாளர்களை வைத்து உருவாக்கியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கிவருகின்றன.

ஏஐ தொழில்நுட்பம் எல்லோரையும் கவர ஆரம்பித்திருக்கிறது. அதனை வைத்து தாங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் உருவாக்கி திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள் ரசிகர்கள். இறந்து போன தங்களது உறவினர்களை மீண்டும் உயிரோடு கொண்டு வருவது, தாங்கள் விருப்பப்பட்டபடி இடத்தை உருவாக்குவது என அசால்ட்டாக அந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அட்டகாசப்படுத்திவருகிறார்கள் ரசிகர்கள்.

பிரச்னையும் உண்டு: இப்படி உருவாக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றன. அதேசமயம் இதனை தவறாக பயன்படுத்தும் சமூக விரோதிகள் தங்கள் இஷ்டத்துக்கு முகம் சுளிக்கும்படியும், ஆபாசமாகவும் சிலரின் புகைப்படங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். அது பெரிய ஆபத்தாக இருக்கிறது என்று சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து அச்சத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.

AI Photos of Top Tamil Music Directors and Filmmakers at a Tea shop Go Viral
Photo Credit:

நடிகைகள்தான் டார்கெட்: அந்த சமூக விரோதிகளின் டார்கெட்டாக பெரும்பாலும் நடிகைகள்தான் இருக்கிறார்கள். நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான டீப் ஃபேக் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது அனைவரும் அறிந்ததே. அதேபோல் சமீபத்தில்கூட நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படத்தைகூட தவறாக சித்தரித்து ஒரு பெண்மணி வெளியிட்டிருந்தது அதிர்ச்சியை கிளப்பியிருந்தது.

ட்ரெண்டான புகைப்படங்கள்: இப்படி சில மைனஸ்கள் ஏஐயில் இருந்தாலும் அதை ஆரோக்கியமாக பயன்படுத்தி மற்றவர்களை மகிழ்விப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி நேற்று ரசிகர் ஒருவர் கோலிவுட் டாப் ஸ்டார்கள் ஒன்றாக டீ குடிக்க சென்றால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை ஏஐயை வைத்து சாத்தியப்படுத்தியிருந்தார். அதுதான் நேற்று இணையம் முழுக்க சென்சேஷனல் ஆகியிருந்தது.

புதிய புகைப்படங்கள்: இந்நிலையில் இன்றும் அதேபோன்ற ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்கள். அதாவது இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோரும்; விஜய், அட்லீ, நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் ஒரே டீ கடையில் அமர்ந்து டீ குடித்துக்கொண்டே ஜாலியாக அரட்டை அடிக்கும்படியான இரண்டு புகைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புகைப்படங்களும் பயங்கர ட்ரெண்டாகியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X