'இதுதான்டா ஸ்டன்ட்;... ஐ டீசரை லீக் பண்ணவங்க மீது வழக்காம்!

By Shankar

ஐ படத்தின் ட்ரைலரை லீக் பண்ணவர்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொந்தளித்து வருகிறாராம்.

ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள ஐ படத்துக்கு தயார் செய்யப்பட்ட ட்ரைலரை, அது முறைப்படி வெளியாகும் முன்பே யாரோ சிலர் யு ட்யூபில் வெளியிட்டுவிட்டதாக கடந்த சில தினங்களாக பரபர செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

Ai producer decides to file case against trailer leak

ஆரம்பத்தில் இந்த வேலையைப் பார்த்தது யாரோ ஒரு செய்தியாளர்தான் என்று கிளப்பி விட்டார்கள். ஆனால் பின்னர், படக்குழுவைச் சேர்ந்த சிலர்தான் இப்படிச் செய்துவிட்டதாகக் கூறினர்.

ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே வெறும் பப்ளிசிட்டி ஸ்டன்ட்தான் என்றும், ஷங்கர் மற்றும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படங்களுக்கான ஆரம்ப பப்ளிசிட்டி இப்படித்தான் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தன் படத்தின் ட்ரைலரை வேண்டுமென்றே சிலர் வெளியிட்டுவிட்டதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ள தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், குறித்த நபர் மீது காவல் துறையில் புகார் செய்து வழக்கு பதிவு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

அப்போ யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா ஆஸ்கார் சார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X