twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐ பட ட்ரைலர்.. லீக் ஆனதா... பப்ளிசிட்டிக்காக லீக் பண்ணாங்களா?

    By Shankar
    |

    ஐ படத்தின் ட்ரைலரை யாரோ திருட்டுத்தனமாக லீக் பண்ணி விட்டதாக தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொந்தளித்ததாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

    உண்மையில் இந்த செய்திகள் தானாக வெளியானவை அல்ல, உருவாக்கப்பட்டவை என்கிறார்கள் ஐ படக்குழுவைச் சேர்ந்த சிலர்.

    Ai trailer leak complaint is fake

    கடந்த சில தினங்களாக சில செய்தியாளர்களை அழைத்து படம் குறித்து நம்ப முடியாத அளவுக்கு பல தகவல்களை அள்ளி வீசி வருகிறார் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.

    அப்போது படத்தின் ட்ரைலரையும் அவர் காட்டியதாகவும், அதை யாரோ செல்போனில் படம்பிடித்து யு ட்யூபில் போட்டுவிட்டதாகவும், அதனால் ஆஸ்கார் கொதித்துப் போனதாகவும் செய்தி பரப்பி வருகிறார்கள்.

    உண்மையில் அங்கு போன செய்தியாளர்கள் யாரும் இந்த வேலையைப் பார்க்கவில்லையாம். படக்குழுவிலிருந்தே இதனை வெளியிட்டுள்ளனர்.

    ஷங்கர் படங்களைப் பொருத்தவரை சிவாஜியிலிருந்தே இந்த டெக்னிக் தொடர்கிறது. ஏதாவது ஒரு பாடல் அல்லது காட்சிகளை அவர்களாகவே வெளியிட்டுவிட்டு, யாரோ திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டதாக புகார் கூறுவதும், பின்னர் அதை அப்படியே விட்டுவிடுவதும் வழக்கம்.

    அதேபோல அந்நியன், தசாவதாரம் போன்ற ஆஸ்கார் பிலிம்ஸ் படங்களிலும் இதே கதைதான்.

    எனவே ஐ படத்தின் இந்த ட்ரைலர் லீக் சமாச்சாரமும், ஆஸ்காரின் கொந்தளிப்பும் 'ச்சும் ஐ வாஷ்' என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர்!

    English summary
    Sources from Kollywood say that the recent Ai trailer leak complaint of Aascar Ravichandiran is fake and cooked one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X