Ajith : அஜித் ஓர் அற்புதமான மனிதர்.. நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்தை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீரென நேரில் சந்தித்து பேசினார்கள் .

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார்.

அஜித்தின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

அஜித்தின் தந்தை மறைவு

அஜித்தின் தந்தை மறைவு

அஜித்தின் தந்தை உடலுக்கு நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் மிர்ச்சி சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பாளர் தியாகராஜன் மற்றும் திரைத்துறையினர் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இவர்களை தொடர்ந்து நடிகர் விஜய் அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி ஆறுதல் கூறினார்.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இதையடுத்து சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு அஜித் தந்தையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.அஜித்தின் தந்தை மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல்

முன்னாள் அமைச்சர் நேரில் ஆறுதல்

இந்நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ ஆகியோர் அஜித்தை நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இதுகுறித்து, விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழ்த்திரையுலகின் மிகமுக்கியமான முன்னணி நடிகர் அஜீத்குமார் அவர்களின் அன்புத் தந்தை மறைவையொட்டி மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களின் சார்பாக முன்னாள் அமைச்சர் அண்ணன் கடம்பூர் ராஜூ அவர்களுடன் அவரது இல்லம் சென்று ஆறுதல் தெரிவித்தோம்.

தூய மனம் கொண்டவர்

தூய மனம் கொண்டவர்

கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீடித்த அச்சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசுகிற வாய்ப்பு அமைந்தது. அனுபவமும், மனப்பக்குவமும் நிறைந்த அவருடைய பேச்சில் எதார்த்தமும் உண்மையும் பிறர்க்கு உதவ வேண்டுமென்கிற தூய மனமும் வெளிப்பட்டது மிகுந்த பாராட்டுக்குரியது என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X