சங்கீதா குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்.. கண்டிக்காத விஜய்.. மாதர் சங்கம் கண்டனம்
சென்னை: நடிகர் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு விண்ணப்பித்துள்ளார். விவாகரத்திற்கான காரணமாக தனது கணவர் விஜய் வேறு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்று குற்றம் சுமத்தியது மட்டும் இல்லாமல், தேவைப்பட்டால் ஆதரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி இருக்கையில் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும், இணையதளத்தில் விஜய் மனைவி சங்கீதா குறித்து மிகவும் மோசமாக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக விஜய்யோ அல்லது அவரது வழக்கறிஞர் தரப்பில் இருந்தோ, கண்டித்து ஒரு கண்டன அறிக்கை கூட வெளிவரவில்லை. இப்படி இருக்கையில் இது தொடர்பாக இந்திய ஜனநாயக மாதர் சங்கம் விஜய்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், " விஜய் - சங்கீதா இடையிலான விவாகரத்து மனு தாக்கல் என்பது ஒரு தனிப்பட்ட சட்ட நடைமுறை. இதைச் சமூக வலைதளங்களில் ஆபாசமாக விவாதிக்கவோ, இழிவு படுத்தவோ யாருக்கும் உரிமை இல்லை.

ம்றைமுக ஒப்புதல்: விஜய்யின் பெயரை கூறிக்கொண்டு அவரது தொண்டர்கள் சங்கீதாவிற்கு எதிராக ஆணாதிக்க வன்முறைப் பதிவுகள் மற்றும் கேலிச்சித்திரங்களை பரப்பி வருகின்றனர். இது கருத்துச் சுதந்திரம் அல்ல, பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறை. பொது வாழ்விற்கு வந்த பிறகு இத்தகைய செயல்களைக் கண்டிக்காமல் தவெக தலைவர் விஜய் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மௌனம், வன்முறைக்கு வழங்கப்படும் மறைமுக ஒப்புதலாக அமையும்.
கண்டனம்: ரசிகர்கள் என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆணாதிக்க சமூக வலைதள வன்முறையை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கண்டிக்க வேண்டும். இது ஒரு அரசியல் கட்சி தலைவரின் அரசியல் சமூக பொறுப்பு. ஆபாச பதிவுகளை தடுத்து நிறுத்த சைபர் குற்றப்பிரிவு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இந்த கண்டன அறிக்கை பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், விஜய் ஏன் இன்னும் வாய் திறக்க வில்லை என்றும், விஜய் ஏன் இன்னும் தனது மனைவிக்கு எதிரான ஆபாசப் பதிவுகளுக்கு எதிராக வாய் திறக்காமல் உள்ளார் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











