»   »  39000 அடி உயரத்தில் நடிகர் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள்!

39000 அடி உயரத்தில் நடிகர் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரசிகைகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
39000 அடி உயரத்தில் விக்ரமுக்கு இன்ப அதிர்ச்சி!- வீடியோ

சென்னை: தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சீயான் விக்ரம். இவர் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் 'ஸ்கெட்ச்'. இப்படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில் 'சாமி 2' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் விமானம் ஒன்றில் சமீபத்தில் பயணித்தார். அப்போது விக்ரமுக்கு விமான பணிப்பெண்கள் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்தத் தகவலை விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

Air hostess surprises actor vikram

விக்ரமின் வருகையை அறிந்த விமான பணிப்பெண்கள், இன்ப அதிர்ச்சி கொடுக்கத் திட்டமிட்டனர். அதன்படி, வாழ்த்து அட்டையில் 'இந்த விமானத்தில் பயணிக்கும் மிகவும் திறமையான சூப்பர் ஸ்டார் வினோத் விக்ரமுக்கு நன்றி' என்று எழுதியுள்ளனர்.

Air hostess surprises actor vikram

அதனுடன் சாக்லேட், கேக், ஜூஸ் ஆகியவற்றைக் கொடுத்து விக்ரமுக்கு ஆச்சரியம் அளித்தனர். பின்னர் அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவத்தால் நடிகர் விக்ரம் நெகிழ்ந்து போயிருக்கிறார்.

Read more about: vikram விக்ரம்
English summary
Vikram is one of the leading actors of Tamil cinema. Currently, Vikram is acting in 'Saamy 2' in Hari's direction. Air hostess have given a surprise to Vikram. Vikram shared this experience on his Instagram page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X