சின்ன வயசு நயன்தாரானு கூப்டாக.. பொங்கிச் சிரிக்கும் "கறுப்பழகி"!
சென்னை: கேப்ரில்லாவை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த வெடுக் வெடுக் டிக் டாக் வீடியோக்களில் வந்து அசத்தியவர் இவர்தான்.
கேப்ரில்லாவை நாம் சில படங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் விஜய் டிவியில் பாரத்திருப்போம். இவர் திருச்சியில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்தவர்.

முதலில் இவருக்கு விஜய் டிவியின் கலக்கபோவது யாரு சீசன் 5ல் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார் கேப்ரில்லா. அதன் மூலம் நிறைய குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கேப்ரில்லாவுக்கு கிடைத்தது. அதையும் சரியாக பயன்படுத்தினார் கேப்ரில்லா.
அதில் ஒரு குறும்படம் திரையரங்கில் திரையிடப்பட்டது. அங்கு கேப்ரில்லாவின் நடிப்பிற்கு கிடைத்த கைதட்டுகள் தான் என்னை அதிகமாக நடிக்க வைத்தது என்று கேப்ரில்லா ஒரு முறை கூறினார்.

கேப்ரில்லாக்கு கிடைத்த முதல் சினிமா வாய்பே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தான். கபாலி பட இறுதிக்காட்சியில் ரஜினியுடன் அருகே அமர்ந்து கேப்ரில்லா பேசிகொண்டிருப்பார். அப்போது கேப்ரில்லாவை பலருக்கு தெரியாததால் கேப்ரில்லாவை நாம் யாரும் கவனித்திருக்க மாட்டோம். அதற்கு பிறகு இனையத்தில் டிக்டாக் செயலியின் மூலம் வசனம் இல்லாமல் செய்கை நடிப்பின் மூலம் பலரையும் கவரந்தார் கேப்ரில்லா .
இதன் பிறகு மகளிர் மட்டும், ஐரா ,காஞ்சனா போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் கேப்ரில்லாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. முக்கியமாக ஐரா படத்தில் மிக சிறந்த கதாபாத்திரமே கிடைத்தது. அதில் சிறு வயது நயன்தாராவாக நடித்திருப்பார் கேப்ரில்லா.

அந்த படத்திற்கு பிறகு பலரும் கேப்ரில்லாவிடம் அந்த படத்தில் நீ அப்படியே சின்ன வயசு நயன்தாரா போலவே நடித்து இருக்கிறாய் என்று கூறியதாக கேப்ரில்லா ஒரு தனியார் ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும் போது கூறினார்.
தற்போது நாடகங்கள் மற்றும் படங்களில் கேப்ரில்லாவுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறது ,தற்போது கூட 'கரிச காட்டு காதல் ' என்ற நாடகத்தில் நடித்து வருகிறார் கேப்ரில்லா. இதை தாண்டி திறமையுள்ள கேப்ரில்லா மென்மேலும் உயர வாழத்துகள் .


Click it and Unblock the Notifications











