Airaa: ஆரம்பமே செருப்படி- நயன்தாரா ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி
Recommended Video

சென்னை: ஐரா படத்தின் முதல் காட்சியிலேயே தியேட்டரை அதிர வைத்துள்ளார் நயன்தாரா.
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. பட ரிலீஸுக்கு முன்பு ராதாரவி நயன்தாராவை பற்றி கொச்சையாக பேசியது பெரும் பிரச்சனையானது.
முதலில் அமைதியாக இருந்த நயன்தாரா பின்னர் ராதாரவியை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

நயன்தாரா
ஐரா படம் துவங்கிய வேகத்தில் மீடியாவில் இந்த அளவுக்கு வர 4 பேரிடம் போகாமலா இருந்திருப்ப என்று கேட்டவருக்கு நெத்தியடி பதில் கொடுத்த நயன்தாராவை பார்த்து தியேட்டரில் விசில் பறந்தது.

செருப்படி
படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்றவர்கள் நயன்தாரா கொடுத்த நெத்தியடி பதிலை பார்த்து ராதாரவிக்கு நல்ல செருப்படி கிடைத்துவிட்டது என்று கைதட்டியுள்ளனர். சர்ஜுன் எதேச்சையாக வைத்த அந்த காட்சி ராதாரவிக்கு பதிலடி கொடுப்பது போன்று அமைந்துவிட்டது.

ஏன்?
ராதாரவி எத்தனையோ நடிகைகளை அசிங்கமாக பேசியுள்ளார். நயன்தாராவுக்காக மட்டும் ஏன் சிலர் பொங்குகிறார்கள், நடவடிக்கை எடுக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. யாராவது ஒரு ஆள் எதிர்த்தால் தானே ராதாரவி போன்றோர் அடங்குவார்கள். இத்தனை நாட்களாக யாரும் கண்டிக்காததால் அவர் இஷ்டத்திற்கு பேசினார்.

சினிமா
திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்று நடிகைகள் பலரே ஒப்புக் கொண்டுள்ளனர். அத்தகைய சினிமா உலகில் போராடி லேடி சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வெளியாகியுள்ள ஐரா படத்தை பார்த்தவர்களால் நயன்தாராவின் நடிப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நயன்தாராவை பிடிக்காது என்று சொல்பவர்களால் கூட அவரின் நடிப்பை குறை சொல்ல முடியாது.


Click it and Unblock the Notifications











