Airaa: ஸ்னீக்பீக் மூலம் ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்.. ‘செருப்படி’ என ரசிகர்கள் கொண்டாட்டம்

ராதாரவி பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, ஐரா படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Recommended Video

Radha Ravi Insults Nayanthara : நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி-வீடியோ

சென்னை: ராதாரவி பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, நயன்தாரா நடித்துள்ள ஐரா படத்தின் ஸ்னீக்பீக் காட்சியை வெளியிட்டுள்ளது படக்குழு.

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள கொலையுதிர்காலம் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ராதாரவியின் பேச்சு சர்ச்சையில் சிக்கியுள்ளது. நயன் குறித்து அவர் தரக்குறைவாக பேசியதற்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நயனின் காதலரான விக்னேஷ்சிவனும் இது தொடர்பாக காட்டமாக பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக திமுகவும் ராதாரவியை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

வீடியோ:

வீடியோ:

இந்நிலையில், ராதாரவியின் சர்ச்சைப் பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக ஐரா படக்குழு, அப்படத்தின் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்காட்சியில் நயனைப் பார்த்து ஒருவர், ‘மீடியாவுல இருக்க..' என ஆபாசமாகப் பேசுகிறார்.

நயன் டயலாக்:

அதற்கு பதிலடி தரும் விதமாக நயன், "உன்ன மாதிரி சிலரால தான் பெண்களுக்கு வெளியில் சென்று நிம்மதியா வேலை பார்க்க முடியலை" எனக் கோபமாக கூறுகிறார். இந்த வீடியோவை ஐரா படத்தைத் தயாரித்துள்ள கேஜேஆர் ஸ்டூடியோஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரசிகர்கள் மகிழ்ச்சி:

ராதாரவியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், சரியாக இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது கேஜேஆர் ஸ்டூடியோஸ். இதனால் நயன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. ராதாரவி பேச்சுக்கு செருப்படியாக இந்த வீடியோ வெளியாகி இருப்பதாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைரல் வீடியோ:

மேலும், ராதாரவிக்கு நயனே இந்த வீடியோ மூலம் பதிலடி தந்திருப்பதாகவும், அவர்கள் கூறி வருகின்றனர். இதனால் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வாரம் வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X