எதுவும் பேசாமல் நம்மை பேச வைத்த நயன்: மிரட்டும் ஐரா ஸ்னீக்பீக் 2
சென்னை: ஐரா படத்தின் 2வது ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது.
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஐரா படம் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் ஸ்னீக்பீக் ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளியானது.

இன்று இரண்டாவது ஸ்னீக்பீக் வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா ஒரு வார்த்தை கூட பேசாமல் நம்மை எல்லாம் அவரை பற்றி பேச வைத்துவிட்டார். ஸ்னீக்பீக்கில் பேக்கிரவுண்ட் இசை இல்லாமல் நம்மை ஏதேதோ யோசிக்க வைக்கிறது.
ஸ்னீக்பீக்கே இப்படி என்றால் படம் நிச்சயம் மிரட்டலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நயன்தாராவுக்கு ஒரு ஹிட் பார்சல். பெரிய ஹீரோக்களுக்கு இணையாக நயன்தாராவின் ஐரா படத்திற்கும் அதிகாலை 5 மணி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
படம் ரிலீஸாகும் அன்று தியேட்டருக்கு வந்து ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. ஐரா படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2019ம் ஆண்டு நயன்தாராவுக்கு நல்லவிதமாக துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











