ஒரேயொரு டயலாக்கில் சாச்சுப்புட்ட நயன்: தலைவிக்கு ஒரு 'ஹிட்' பார்சல் #Airaa
சென்னை: ஐரா படத்தின் டீஸர் வித்தியாசமாக நன்றாக உள்ளது.
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ஐரா. நயன்தாரா இரட்டை வேடங்களில் அதுவும் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார். அதில் ஒரு நயன்தாரா கருப்பழகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ஐரா படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டீஸர்
ஒருத்தருக்கு ஒருத்தர் சம்பந்தமே இல்லாத இரண்டு நயன்தாரா வரும் ஐரா டீஸர் வித்தியாசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக டீஸரின் இறுதியில் வாழ்க்கையில் எதுவுமே சந்தோஷமாக கிடைக்காத ஒருத்திக்கு வாழ்க்கையே ஒரு ஆசை தான் என்று நயன்தாரா கூறுவதை கேட்டால் ஏதோ செய்கிறது.

நயன்தாரா
டீஸரை பார்த்தாலே இது வழக்கமான படம் இல்லை என்பது தெரிகிறது. கதாபாத்திரத்திற்காக நயன்தாரா தனது மேனி நிறத்தை மாற்றி ரசிகர்களை அசர வைத்துள்ளார். நயன்தாராவுக்கு மேலும் ஒரு ஹிட் படமாக ஐரா அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

குறும்படம்
லட்சுமி குறும்படம் மூலம் நம் கவனத்தை ஈர்த்தவர் இந்த சர்ஜுன். குறும்படத்தை வைத்தே நம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் நயன்தாராவை வைத்து நிச்சயம் ரசிகர்களை வியக்க வைப்பார் என்று நம்பப்படுகிறது.
விக்னேஷ் சிவன்
ஐரா நிச்சயம் ஹிட்டாகும் என்று நாம் மட்டும் கூறவில்லை நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவனும் அதையே தான் சொல்கிறார்.


Click it and Unblock the Notifications











