Airaa Twitter Review : நயன்தாரா ஜெயித்தாரா இல்லையா?- ஐரா ட்விட்டர் விமர்சனம்
சென்னை: நயன்தாரா நடித்துள்ள ஐரா படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா பவானி, யமுனா என இரட்டை வேடங்களில் நடித்த ஐரா படம் இன்று வெளியாகியுள்ளது. அதிகாலை காட்சியை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்தனர்.
படம் பார்த்தவர்கள் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பவானி
#Airaa பவானி கதாபாத்திரத்தில் நயன்தாரா அசத்தியிருக்கிறார். அந்த நடிப்பு பல காலம் பேசப்படும்.
நயன்தாரா
ஐரா மிகவும் சுவாரஸ்யமான படம். இயக்குநரின் யோசனை வித்தியாசமாக உள்ளது. யோகிபாபு காமெடி சிறப்பு. நயன்தாராவின் நடிப்பு வழக்கம் போன்று வேற லெவல்
சிறப்பு
ஐரா கண்டிப்பாக பார்க்கக் கூடிய படம். பிளாஷ்பேக் காட்சிகள், யோகி பாபு காமெடி அருமை. நயன்தாரா படத்தை தாங்குகிறார்.
சொதப்பல்
நயன்தாராவை தவிர படத்தில் ஒன்றும் இல்லை என்று இப்படியும் விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











