பணத்தை திருப்பிக் கொடுக்கும் ஏர்டெல்: விஸ்வரூபம் டிடிஹெச் ரிலீ்ஸ் அம்புட்டுத்தானா?

விஸ்வபரூபம் படத்தை முதலில் டிடிஹெச்சில் தான் வெளியிடுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்தார். இதையடுத்து எழுந்த பல பிரச்சனைகளுக்குப் பிறகு தனது படம் முதலில் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்யப்படுகிறது என்று அறிவித்துவிட்டார். விஸ்ரூபத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கிய ஏர்டெல் டிடிஹெச் வாடிக்கையாளர்களிடம் பணத்தையும் வசூலித்துவிட்டது.
இந்நிலையில் கமல் திடீர் என்று மனதை மாற்றிக் கொண்டுள்ளார். டிடிஹெச்சில் பின்னர் ஒரு நாள் ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். எந்த தேதி என்று அவர் குறிப்பிடவில்லை. இந்நிலையில் ஏர்டெல் டிடிஹெச் விஸ்வரூபம் படத்திற்காக வாங்கிய பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பிக் கொடுத்து வருகிறது என்று கூறப்படுகிறது.
பணம் திருப்பிக் கொடுக்கப்படுகிறது என்றால் விஸ்வரூபம் டிடிஹெச்சில் வராதா என்று ரசிகர்கள் கேட்கின்றனர்.
Comments


Click it and Unblock the Notifications