Bigg Boss Tamil 7 Eviction: இந்த வாரம் ஐஷு தான் அவுட்.. லீக்கானது உறுதியான தகவல்.. நிக்சன் பாவம்!

சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் குறைவான ஓட்டுக்களை வாங்கி பூர்ணிமா ரவி கடைசி இடத்தில் இருந்த நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ஐஷு எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அமீரின் சகோதரியான ஐஷு அமீர் மற்றும் பாவனி பண்ண ட்ரிக்கையே பிக் பாஸ் வீட்டில் பயன்படுத்தி கடைசி வரை இருக்க பிளான் போட்டாரா என ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.

Aishu evicted from Bigg Boss Tamil 7 details leaked

அசல் கோலாரே பரவாயில்லை என்கிற அளவுக்கு நிக்சன் வேட்டி கட்டி விடுவது, கன்னத்தை பிடித்து தடவுவது, காலை பிடித்து இழுப்பது, கூந்தல் முடி சீவி விடுவது என ஐஷுவை ரொம்பவே அக்கறையாக பார்த்துக் கொள்வது போல டார்ச்சர் செய்து வந்தார்.

ஐஷு வெளியேற்றம்: பிக் பாஸ் வீட்டில் இருந்து ஐஷு தான் இந்த வாரம் வெளியேறி உள்ளார் என்கிற உறுதியான தகவல் தற்போது லீக் ஆகி உள்ளது. பூர்ணிமா ரவியையும் மாயாவையும் பிரிப்பதை விட ஐஷுவையும் நிக்சனையும் பிரிப்பதே நல்லது என்கிற முடிவுக்கு பிக் பாஸ் டீம் வந்திருக்கிறது தெளிவாக தெரிந்துள்ளது.

Aishu evicted from Bigg Boss Tamil 7 details leaked

பெற்றோர்கள் பிரஷர்: பிக் பாஸ் வீட்டில் தனது மகளின் பெயர் டோட்டல் டேமேஜ் ஆனதை பார்த்து கடுப்பான ஐஷுவின் பெற்றோர்கள் விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீமுடன் நேரடியாக சென்று தங்கள் பெண்ணை வெளியே அனுப்புங்க என போட்ட பிரஷர் தான் ஐஷு இந்த வாரம் வெளியேற காரணம் என தகவல்கள் லீக் ஆகி உள்ளன.

குறைவான ஓட்டு: ஆனால், நிகழ்ச்சியில் ஐஷு குறைவான ஓட்டுக்களை வாங்கி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதை போலவே காட்டியிருப்பதாக கூறுகின்றனர். ஐஷுவை பிரிந்து இனிமேல் நிக்சன் என்ன செய்வார் என்றும் அவரையும் அடுத்த வாரம் அனுப்பி விடுங்க பிக் பாஸ் பாவம் என ரசிகர்கள் கிண்டல் செய்து கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். இந்த வாரம் தீபாவளிக்கு பிக் பாஸ் வீட்டில் சரவெடி வெடிக்கப் போவது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X