எல்லாம் போதும் அனுப்புங்க.. ஐஷு எவிக்ட்டாக இது காரணம்? நிக்சனால முடிஞ்சத செஞ்சுட்டாரு.. பரபர பின்னணி

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் சீசன் 7ல் நேற்று ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார். அதுதொடர்பான பின்னணி தகவல் வெளியாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நாளொரு சண்டையும், பஞ்சாயத்துமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. பவா செல்லதுரை தானாகவே வெளியேற அனன்யா, வினுஷா, விஜய் வர்மா, அன்னபாரதி, யுகேந்திரன் ஆகியோர் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டனர். இந்த சீசனின் உச்சக்கட்ட பஞ்சாயத்தாக அமைந்தது என்றால் அது பிரதீப் ஆண்டனி விவகாரம்தான்.

Aishu was evicted in Bigg Boss season 7 yesterday Here is related background information


பிரதீப் ஆண்டனி: இந்த சீசன் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஹவுஸ் மேட்ஸுகளுக்கு டஃப் போட்டியாளராக திகழ்ந்தவர் பிரதீப் ஆண்டனி. எப்படியும் இவர் பல நாட்கள் வீட்டுக்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது மாயா, ஜோவிகா, பூர்ணிமா, ரவீனா, மணி, விஷ்ணு உள்ளிட்டோர் வைத்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரெட் கார்டு கொடுத்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

விமர்சனம்: கமல் ஹாசன் மற்றும் பிக்பாஸின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை காரணம் காட்டி அவர் வெளியேற்றப்பட்டது அறம் இல்லை. அதிலும் நிக்சன் ஐஷுவிடம் எல்லை மீறி நடக்கிறார்; மாயா, பூர்ணிமா ஆகியோர் 18+ ஜோக்குகளை அசால்ட்டாக அடிக்கின்றனர். அவர்கள் எல்லாம் வீட்டில் இருக்க பிரதீப் ஏன் வெளியேற்றப்பட வேண்டும் என கேள்விகள் எழுந்தன.

விளக்கமா? சமாளிப்பா?: கடந்த வாரம் முழுக்க பிக்பாஸை சுற்றி மேற்கூறிய கேள்விகள்தான் எழுப்பப்பட்டன. எனவே கமல் ஹாசன் தரமான விளக்கம் கொடுப்பார் என்றும்; மாயா, பூர்ணிமா, நிக்சன் உள்ளிட்டோரை கண்டிப்பார் என்றும் ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சனி, ஞாயிறில் கமல் ஹாசனின் பேச்சை பார்த்த ரசிகர்களில் பலர் ஆண்டவர் விளக்கம் எல்லாம் கொடுக்கவில்லை எப்படியோ சமாளித்துவிட்டார் என்று ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

ஐஷு எவிக்ட்: நிலைமை இப்படி இருக்க கடந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்தவர்களில் பூர்ணிமா எவிக்ட் செய்யப்படுவார் என்று தகவல் பரவியது. ஆனால் ஐஷு எவிக்ட் செய்யப்பட்டார். ஐஷுவும் எவிக்ட் செய்யப்பட வேண்டியவர்தான். அவரும் மாயாவின் Bullying கேங்கில் ஒருவர்தான் என்றாலும் பூர்ணிமாவைத்தான் முதலில் வெளியே அனுப்பியிருக்க வேண்டும் என பலரும் சொல்கின்றனர்.

இதுதான் காரணமா?: இந்நிலையில் பூர்ணிமாவுக்கு பதில் ஐஷு வெளியே போனதற்கான காரணம் குறித்து தெரிய வந்திருக்கிறது. அதாவது, பிக்பாஸ் 7 தொடங்கப்பட்டபோது அவர் நன்றாகவே விளையாடிவந்தார். அதை பார்த்து ஐஷுவின் குடும்பத்தினரும் ஹேப்பி மூடில்தான் இருந்தனராம். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நிக்சனுடன் ஏற்பட்ட பழக்கம் அவருக்கு வெளியில் கெட்ட பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தார்களாம்.

இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவை தொடர்புகொண்ட அவர்கள், அவள் விளையாண்டது போதும். 50 லட்சம் பணம், புகழைவிடவும் எங்களது மகளின் பெயர்தான் முக்கியம் அவளை வெளியே அனுப்புங்க என்று வற்புறுத்தியதால்தான் அவர் வெளியேற்றப்பட்டார் என்று தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் நிக்சனால்தான் ஐஷு வெளியே சென்றிருக்கிறார். நிக்சனால் என்ன செய்ய முடியுமோ செஞ்சிட்டாரு என்று ட்ரோல் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X