»   »  ஐஸ்-பிபசாவின் பைசா பிரச்சனை

ஐஸ்-பிபசாவின் பைசா பிரச்சனை

Subscribe to Oneindia Tamil

வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக பெரும் பணம் வாங்கியதாகபுதிய சர்ச்சையில் இந்தி நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிபாஷா பாசு உள்ளிட்டோர்சிக்கியுள்ளனர்.

மும்பையைச் சேர்ந்தவர் மனூன் தாக்கூர். இவர் வெளிநாடுகளில் இந்தித்திரையுலகத்தினரை வைத்து கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர். கடந்த ஆண்டுநவம்பர் மாதம் இவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.அதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கின.

அதில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டபணம் குறித்த பட்டியல் இடம் பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராய் ஒரு நடன நிகழ்ச்சியில்ஆடுவதற்காக ரூ. 50 லட்சம் பெற்றதாகவும், பிபாசாவும் பல லட்சம் வாங்கியதாகவும்அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் துபாயில் நடந்த அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக ஐஸ்வர்யாஉள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் அந்த துபாய் நிறுவனமே நேரடியாகபணத்தைக் கொடுத்ததாகவும், அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் தாக்கூர்தெரிவித்துள்ளார்.

இதே போல பல வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கோடிக்கணக்கில்ஈட்டியுள்ளனர். ஆனால், இந்தப் பணத்துக்கு இவர்கள் கணக்கு காட்டவும் இல்லை,வரி கட்டவும் இல்லை.

இதையடுத்து வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக ஐஸ்வர்யாராய், பிபாஷா பாசு, நடிகர்கள் டினா மோரியா, அக்ஷய் குமார், ஜாவேத் ஜாப்ரிஉள்ளிட்ட 20 நடிகர், நடிகைகளுக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள்,எவ்வளவு பணம் பெற்றனர் என்பது உள்ளிட்ட விவரங்கைள தெரிவிக்குமாறும்நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை நேரில் அழைத்து விசாரிக்கவும்அமலாக்கப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் குறித்து ஐஸ்வர்யா ராயின் வழக்கறிஞர் கிரீஷ் குல்கர்னி கூறுகையில்,இப்படி ஒரு நோட்டீஸ் எங்களுக்கு வரவில்லை. தாக்கூர் கொடுத்த வாக்குமூலம்,அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எங்களுக்குத் தெரியாது.

அவர்கள் கூறும் கலை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் ஆடவே இல்லை. அப்படிஇருக்கையில் எப்படி ரூ. 50 லட்சம் பணத்தை அவருக்கு கொடுப்பார்கள். தெளிவானமன நிலை உள்ள எவரும் ஒரு நிகழ்ச்சிக்கு இவ்வளவு பணம் கொடுக்க மாட்டார்கள்.

ஐஸ்வர்யாவுக்கு எதிரான சில தீய சக்திகள்தான் இந்தக் குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள்.அரசியல் காரணங்களுக்காக அவரை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்கள் என்றார்குல்கர்னி.

சமீபத்தில்தான் ஐஸ்வர்யா ராய் முகவரிக்கு ஹாலந்து நாட்டிலிருந்து ஒரு பார்சல்வந்தது. அதில் சில மின்னணு சாதனங்களும், 23,000 ஈரோ கரன்சிகளும் இருந்தன.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மும்பை சுங்கத் துறை, அந்தப் பணத்துக்கும்ஐஸுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விட்டது. ஆனால் அமலாக்கப் பிரிவுதொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது ராய் புதிய சிக்கலில்மாட்டியுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil