»   »  ஐஸ்வர்யாவுக்கு எதிராக பூசாரிகள் போர்க்கொடி

ஐஸ்வர்யாவுக்கு எதிராக பூசாரிகள் போர்க்கொடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராயுடன் வந்த பாதுகாவலர்கள் மது அருந்தி விட்டு கோவிலுக்குள்வந்ததற்காக ஐஸ்வர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என உ.பி. மாநிலம் ஆஜ்மீரில்உள்ள பிரம்மன் கோவில் பூசாரிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

உ.பி. மாநிலம் புஷ்கர் நகரில் பிரம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்குவியாழக்கிழமை ஐஸ்வர்யா ராய் வந்தார். அங்கு அவருக்காக சத்புத்தி யாகம்நடத்தப்பட்டது.

அப்போது ஐஸ்வர்யாவின் பாதுகாப்புக்காக வந்திருந்த காவலர்களில் மூன்று பேர்குடிபோதையில் இருந்ததாக பூசாரிகள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை பின்னர் ஐஸ்வர்யா மறுத்தார். அதில் உண்மை இல்லைஎன்று அவர் கூறினார். பின்னர் ஐஸ்வர்யா கோவிலிலிருந்து கிளம்பியபோது, அவரதுபாதுகாவலர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாவலர்கள் மது அருந்தி விட்டுவந்ததற்காக ஐஸ்வர்யா ராய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பூசாரிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் மூழ்கி குளித்துதான் பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். ஆனால் ஐஸ்வர்யா அதை செய்யவில்லை என்றும் கோவில் பூசாரிகள்குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் பூசாரிகள் சங்கத் தலைவர் லட்டூ ராம் சர்மா தலைமையில்நேற்று கங்கை நீரால் கோவிலைக் கழுவி சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து சர்மா கூறுகையில், கோவில் பூசாரிகளை மதிக்காமல் ஐஸ்வர்யா நடந்துகொண்டார். எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்குஎதிராக போராட்டம் நடத்துவோம் என்றார்.

பிரம்மன் கோவில் பூசாரிகளுக்கும், கோவில் நிர்வாகத்திற்கும் இடையே கடந்த சிலஆண்டுகளாகவே பூசல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தக் கோவிலின்தலைமைப் பூசாரி அக்கோவில் வளாகத்தில் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் தகாதஉறவு கொண்டிருந்ததாக சர்ச்சை எழுந்தது. கோவில் வளாகத்தில் அவர்பயன்படுத்திய மது பாட்டில்களும் சிக்கின.

இதைத் தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அது முதல் கோவில்நிர்வாகத்திற்கும், பூசாரிகளுக்கும் இடையே பூசல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிரம்மன் கோவிலுக்கு வருவதற்கு முன்பு ஆஜ்மீரில் உள்ள பிரபலமான காஜாமொய்னுதீன் சிஷ்டி தர்ஹாவுக்கும் ஐஸ்வர்யா சென்று வழிபட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil