»   »  கேன்ஸ் விழா: தொடங்கி வைத்த ஐஸ்வர்யா கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவை பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார்.பிரான்சிலுள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வருட திரைப்பட விழா நேற்றுதொடங்கியது. இதை பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமெரிக்க டைரக்டர் அலெக்சாண்டர் பெய்ன் ஆகியோர்தொடங்கி வைத்தார்கள்.12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் மற்றும்சிறந்த கலைஞர்களுக்கு விழாவின் இறுதி நாளில் விருதுகள் வழங்கப்படும். விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் அழகி படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ், டோனிமாரிசன், மெக்சிகோ நடிகை சல்மா ஹெய்க், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜான் வூ,ஸ்பெயின் நடிகர் ஜேவியர் பார்டம், பிரான்ஸ் படத்தயாரிப்பாளர்கள் பெனாய்ட் ஜேக்கட், ஆக்னஸ் வர்டா, ஜெர்மன் இயக்குனர்பதி அகின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜூரி குழுவில்இடம்பெற்றிருந்தார்.இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. முதன் முதலாக ஈராக்நாட்டை சேர்ந்த ஒரு படமும் இந்த விழாவில் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேன்ஸ் விழா: தொடங்கி வைத்த ஐஸ்வர்யா கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவை பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார்.பிரான்சிலுள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வருட திரைப்பட விழா நேற்றுதொடங்கியது. இதை பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமெரிக்க டைரக்டர் அலெக்சாண்டர் பெய்ன் ஆகியோர்தொடங்கி வைத்தார்கள்.12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் மற்றும்சிறந்த கலைஞர்களுக்கு விழாவின் இறுதி நாளில் விருதுகள் வழங்கப்படும். விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் அழகி படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ், டோனிமாரிசன், மெக்சிகோ நடிகை சல்மா ஹெய்க், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜான் வூ,ஸ்பெயின் நடிகர் ஜேவியர் பார்டம், பிரான்ஸ் படத்தயாரிப்பாளர்கள் பெனாய்ட் ஜேக்கட், ஆக்னஸ் வர்டா, ஜெர்மன் இயக்குனர்பதி அகின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜூரி குழுவில்இடம்பெற்றிருந்தார்.இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. முதன் முதலாக ஈராக்நாட்டை சேர்ந்த ஒரு படமும் இந்த விழாவில் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கேன்ஸ் நகரில் சர்வதேச திரைப்பட விழாவை பிரபல இந்தி நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி வைத்தார்.

பிரான்சிலுள்ள கேன்ஸ் நகரில் வருடந்தோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இவ்வருட திரைப்பட விழா நேற்றுதொடங்கியது. இதை பிரபல இந்தி நடிகையான ஐஸ்வர்யா ராய் மற்றும் அமெரிக்க டைரக்டர் அலெக்சாண்டர் பெய்ன் ஆகியோர்தொடங்கி வைத்தார்கள்.

12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாடுகளில் தயாரான படங்கள் திரையிடப்படுகின்றன. சிறந்த படங்கள் மற்றும்சிறந்த கலைஞர்களுக்கு விழாவின் இறுதி நாளில் விருதுகள் வழங்கப்படும்.

விருதுக்கான படங்களை தேர்வு செய்யும் ஜூரி குழுவில் அழகி படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை நந்திதா தாஸ், டோனிமாரிசன், மெக்சிகோ நடிகை சல்மா ஹெய்க், பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஜான் வூ,

ஸ்பெயின் நடிகர் ஜேவியர் பார்டம், பிரான்ஸ் படத்தயாரிப்பாளர்கள் பெனாய்ட் ஜேக்கட், ஆக்னஸ் வர்டா, ஜெர்மன் இயக்குனர்பதி அகின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜூரி குழுவில்இடம்பெற்றிருந்தார்.

இந்த விழாவில் உலகம் முழுவதிலும் இருந்து 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொள்கின்றன. முதன் முதலாக ஈராக்நாட்டை சேர்ந்த ஒரு படமும் இந்த விழாவில் பங்கு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil