»   »  பார்சல் பணம்: ஐஸுக்கு தொடர்பு இல்லை

பார்சல் பணம்: ஐஸுக்கு தொடர்பு இல்லை

Subscribe to Oneindia Tamil

நெதர்லாந்து நாட்டிலிருந்து நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அனுப்பப்பட்ட பணத்திற்கும்,அவருக்கும் தொடர்பு இல்லை என மும்பை சுங்கத் துறை அறிவித்துள்ளது.

ஐஸ்வர்யாவின் பழைய வீட்டு முகவரிக்கு சமீபத்தில் நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒருபார்சல் அனுப்பப்பட்டது. அந்தப் பார்சலை ஸ்கேன் செய்து பார்த்த சுங்கத் துறைஅதிகாரிகள், அதில் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள யூரோ பணமும், சில மின்னணுஎந்திரங்களும் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இந்தப் பணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறுஐஸ்வர்யாவுக்கு சுங்கத் துறை உத்தரவிட்டது. இருப்பினும் அப்போது படப்பிடிப்பில்ஐஸ்வர்யா பிசியாக இருப்பதால் வர முடியவில்லை என அவரது சார்பில் சுங்கத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்குப் பதிலாக ஐஸ்வர்யாவின் தந்தை மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத்முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். இருப்பினும் ஐஸ்வர்யாவிடம் விசாரணைநடத்தியே ஆக வேண்டும் என்று சுங்கத் துறை கண்டிப்பாக கூறி விட்டது.

இந் நிலையில், நேற்று முபைக்கு வந்த ஐஸ்வர்யாவிடம் விமான நிலையத்தில்வைத்தே சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கிட்டத்தட்ட 2 மணி நேரம்நடந்த இந்த விசாரணையின்போது பார்சல் பணம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள்துருவித் துருவி கேள்விகள் கேட்டனர்.

விசாரணையின்போது பலமுறை ஐஸ்வர்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக பின்னர்சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். விசாரணைக்குப் பின்னர் ஆணையர் பிரசாத்கூறுகையில்,

விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்தார் ஐஸ்வர்யா. சிலமுறை அவர் மனஉளைச்சலுக்கு ஆளானார். நாங்கள் அவரை சமாதானப்படுத்தினோம். விசாரணைமுடிவில், அப்பணத்திற்கும், அவருக்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.அவர் நிரபராதி என்றார்.

இதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சையிலிருந்து ஐஸ்வர்யா விடுபட்டுள்ளார்.விசாரணைக்குப் பின்னர் ஐஸ்வர்யாவின் வழக்கறிஞர் கிரீஷ் குல்கர்னிசெய்தியாளர்களிடம் பேசுகையில், இது தேவையில்லாத பிரச்சினை. எங்களைத்தேவையில்லாமல் இழுத்து விட்டு விட்டனர். எங்களது தரப்பை விளக்கி விட்டோம்.

நெதர்லாந்திலிருந்து இந்தப் பார்சலை அனுப்பியவர் யார்? உண்மையிலேயே அவர்அந்தப் பெயரில் இருக்கிறாரா? எதற்காக அனுப்பினார் என்பதை விசாரிக்கவேண்டியது சுங்கத் துறையின் வேலை என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil