»   »  பார்சலில் வந்த 14 லட்சம்-ஐஸ்வர்யாவிடம் விசாரணை

பார்சலில் வந்த 14 லட்சம்-ஐஸ்வர்யாவிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

நெதர்லாந்து நாட்டிலிருந்து ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 14 லட்சம் பணம் தபால் மூலம் வந்தது குறித்து அவருக்குசுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் பார்சல்களை ஸ்கேன் செய்து பார்ப்பது தபால் துறையின் வாடிக்கையான விஷயம்.பாதுகாப்பு கருதி இந்த நிநவடிக்கை எடுக்கப்படுகிறது.

அந்த வகையில் ஐஸ்வர்யா ராய்க்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து வந்த ஒரு பார்சலையும் அதிகாரிகள் ஸ்கேன்செய்து பார்த்தபோது அதில் ஐரோப்பிய நாணயமான யூரோ பணக் கட்டுக்கள் இருந்தன.

பார்சலில் பணம் அனுப்பக் கூடாது என்பது விதியாகும். எனவே ஐஸ்வர்யாவுக்கு வந்திருந்த அந்த பார்சலைப்பிரித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ. 14 லட்சம் மதிப்புள்ள யூரோ கரன்சி இருந்தது.

இதுகுறித்து ஐஸ்வர்யாவிடம் விசாரணை நடத்த சுங்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்து அவருக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத் கூறுகையில், மின்னணுப் பொருட்களுக்குள் பணம்மறைத்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் குறித்து அந்த பார்சலில் எந்தவிதக் குறிப்பும் இல்லை.இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் விளக்கம் கேட்கவுள்ளோம். அவருக்கு தெரிந்து அனுப்பப்பட்டுள்ளதா அல்லதுதெரியாமல் வந்த தபாலா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

ஐஸ்வர்யா என்றாலே சர்ச்சை என்றாகிவிட்ட நிலையில் தற்போது யூரோ பணத்தால் புதிய சர்ச்சைகிளம்பியுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil