»   »  பணம் அனுப்பியவரைத் தெரியாது: ஐஸ். மறுப்பு

பணம் அனுப்பியவரைத் தெரியாது: ஐஸ். மறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெதர்லாந்திலிருந்து தனது பெயருக்கு ரூ. 13 லட்சம் பணம் அனுப்பியவர் யார் என்று எனக்குத் தெரியாது எனநடிகை ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராயின் கவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து பார்சல் மூலம் சில மின்னணுப் பொருட்களையும்அத்தோடு 23,000 யூரோ பணத்தையும வைத்து (இந்திய மதிப்பில் ரூ. 13 லட்சம்) ஒருவர் அனுப்பியுள்ளார்.

இந்தப் பணம் எதற்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து சுங்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.இதுதொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் ஐஸ்வர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்தநிலையில் இப்பணம் குறித்து ஐஸ்வர்யா வியப்பு தெரிவித்துள்ளார்.

அக்பத் ஜோதா என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் வந்த ஐஸ்வர்யா அங்கு செய்தியாளர்களிடம்பேசுகையில், யார் பணத்தை அனுப்பியது என்று எனது பெற்றோரும், நீங்களும், உலகின் பல்வேறு பகுதியில்இருப்போரும் வியப்படைந்ததைப் போலவே நானும் வியப்படைந்துள்ளேன்.

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. யார் அனுப்பியது என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை சுமூகமாகமுடியும் என நம்புகிறேன் என்றார். இதற்கிடையே, சுங்கத் துறை விசாரணைக்கு ஐஸ்வர்யா ராய் கண்டிப்பாக வரவேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மும்பை சுங்கத் துறை ஆணையர் பிரசாத்எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பார்சலை அனுப்பியவர் இந்தியாவைச் சேர்ந்தவர். அவரது பெயர் உள்ளிட்டவிவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விசாரணைக்கு ஆஜராகுமாறு கோரி 2 முறை நோட்டீஸ்அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ஐஸ்வர்யா தரப்பில் பதில் ஏதும் இல்லை. இதுகுறித்து விளக்கம் கேட்டுஅவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். விசாரணைக்கு அவர் ஆஜராகாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றார் பிரசாத்.

இந்த நலையில், ஐஸ்வர்யாவின் தந்தை கிஷன் ராஜ் ராய் சுங்கத்துறை அலுவலகத்திற்குச் சென்று உரியஅதிகாரிகளை சந்தித்தார். அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil