»   »  ஐஸுக்கு பணம்-மாட்டும் அவினேஷ்வர்

ஐஸுக்கு பணம்-மாட்டும் அவினேஷ்வர்

Subscribe to Oneindia Tamil

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மின்னணுப் பொருட்களுடன் ரூ. 13 லட்சம் பணம்அடங்கிய பார்சலை நபரின் அடையாளம் தெரிந்தது.

ஐஸ்வர்யாவின் பழைய வீட்டு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து சமீபத்தில் ஒருபார்சல் வந்தது. அதில், சில மின்னணுப் பொருட்களும், ரூ. 13 லட்சம் மதிப்புள்ளயூரோ பணமும் இருந்தது.

இதுதொடர்பாக ஐஸ்வர்யாவிடம் சுங்கத் துறை விசாரணை நநிடத்தியது. அந்தவிசாரணையைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் குற்றமற்றவர், அவருக்கும் பணத்திற்கும்தொடர்பு இல்லை என சுங்கத் துறை அறிவித்தது.

இந் நிலையில் பண பார்சலை அனுப்பியவர் பெயர் அவினேஷ்வர் எனத் தெரியவந்துள்ளது. பார்சல் சர்ச்சை தொடர்பாக வெளியான தகவலைத் தொடர்ந்துநெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிருபர் சம்பந்தப்பட்ட முகவரியை அணுகிவிசாரித்துள்ளார்.

அந்த முகவரியில் 27 வயதாகும் அவினேஷ்வர் என்பவர் இருந்துள்ளார். அவரதுபெயர்தான் பார்சலிலும் இடம் பெற்றிருந்தது . தன்னை ஒரு இந்தி திரைப்படக்கதாசிரியர் என அவினேஷ்வர் கூறிக் கொண்டாராம். ஐஸ்வர்யாவுக்கு தான்தான்பார்சலை அனுப்பியதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஐஸ்வர்யா மட்டுமல்லாது மேலும் பல பாலிவுட் நநிட்சத்திரங்களுக்கு தான் இதுபோலபார்சல், கடிதங்களை அனுப்புவது வழக்கம் என்றும் சிலர் பதில் கூட அனுப்புவார்கள்என்றும் கூறியுள்ளார்.

ஆனால் பார்சலில் பணம் எதையும் தான் அனுப்பவில்லை என்று அந்த நபர்கூறியுள்ளார். இதனால் புதிய சர்ச்சை கிளப்பியுள்ளது.

மேலும் தான் இந்தியாவுக்கு வரத் திட்டமிட்டிருந்ததாகவும், அதற்குள் இந்த சர்ச்சைகிளம்பி விட்டதால் தனது திட்டத்தை ரத்து செய்து விட்டதாகவும் அவினேஷ்வர்கூறியுள்ளார்.

Please Wait while comments are loading...