தனுஷுக்கு விவாகரத்து உறுதியானதா?.. நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் ஐஸ்வர்யா.. திரையுலகில் அடுத்த அதிர்ச்சி
சென்னை: தனுஷும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களை பெற்றிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர்கள், 'தாங்கள் இருவரும் பிரிந்து தனித்தனி பாதையில் பயணப்படப்போகிறோம்' என்று அறிவித்தனர். அதனையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்தார்கள். ஆனால் கடைசியாக நடந்த இரண்டு விசாரணைகளிலும் இரண்டு பேரும் ஆஜராகவில்லை. எனவே அவர்கள் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்பட்டது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன் படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட்டியபோது ஐஸ்வர்யாவுக்கு தனுஷுடன் ஏற்பட்ட பழக்கம் பின்னாட்களில் காதலாக மலர்ந்தது. முதலில் ரஜினியின் வீட்டில் இந்தக் காதலுக்கு எதிர்ப்பு வந்தது என்றும்; பிறகு மகளின் பிடிவாதத்துக்காகவும், காதலுக்காகவும் ரஜினிகாந்த்தும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தும் ஒத்துக்கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

அமைதியான வாழ்க்கை: திருமணத்துக்கு பிறகு இருவருமே அமைதியாகவும், காதலோடும் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.முக்கியமாக தனுஷின் நடை, உடை, பாவனை, பேசும் விதம் என பலவற்றையும் மெருகேற்றிய பங்கு ஐஸ்வர்யாவுக்கு உண்டு. அதேபோல் தனது மனைவியின் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையை உணர்ந்துகொண்டு ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் ஹீரோவாகவும், வை ராஜா வை படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்துக்கொடுத்தார்.
பிரிந்த தம்பதி: இப்படி சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. இருந்தாலும் விவாகரத்து கோரி அவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லாமல் இருந்ததால்; மீண்டும் அவர்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் இருந்ததாக கருதப்பட்டது. ஆனால் அண்மையில் அவர்கள் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் சட்டப்படி விவாகரத்து கேட்டு மனுவை தாக்கல் செய்தார்கள். இதன் காரணமாக அவர்கள் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்டது.
துளிர்த்த நம்பிக்கை: சூழல் இப்படி இருக்க கடந்த மாதத்தில் இந்த விவாகரத்து மனு இரண்டு முறை விசாரணைக்கு வந்தது. அந்த சமயத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இரண்டு பேருமே ஆஜராகவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவரும் இணையப்போகிறார்கள்; ரஜினி மற்றும் தங்களது மகன்களின் எதிர்காலத்துக்காக சேர்வார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று சில பத்திரிகையாளர்களும் கூறினார்கள்.
அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா: இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உச்சக்கட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். அதாவது தனுஷ் - ஐஸ்வர்யாவின் விவாகரத்து மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் ஆஜராகமாட்டார் என்று நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும், தனுஷும் ஆஜரானார்கள் இதனால் இருவருக்குமான விவாகரத்து உறுதிதான் என்பதை மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார்களோ என்று கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











