Aishwarya Arjun: மாணிக்க மோதிரம்.. தங்க தட்டில் விருந்து.. ஐஸ்வர்யா அர்ஜுன் நிச்சயதார்த்த ஸ்பெஷல்!
சென்னை: ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் உமாபதி ராமைய்யாவின் நிச்சயதார்த்தம் சமீபத்தில் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில், அந்த விழாவை தொகுத்து வழங்கிய ஈவன்ட் மேனேஜ்மென்ட் டீமை சேர்ந்த ஆத்விக் ஆர் சுதர்ஷன் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகளுக்கும் காமெடி நடிகர் தம்பி ராமைய்யா மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அந்த நிச்சயதார்த்த விழாவில் அவருக்கு அணிவிக்கப்பட்ட மோதிரம் பிரத்யேகமாக பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒன்றாம்.
ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம்: கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் உமாபதி ராமைய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த ஈவென்ட் மேனேஜர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.
மாணிக்க மோதிரம்: பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார் என்றும் அர்ஜுன் அனைத்தையும் பார்த்து பார்த்து தனது மகளுக்காக செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
வைரமும் மாணிக்கமும்: மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது. இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் லைட் பிங்கில் அடிக்காத கலராக அசத்தலாக உருவாக்கப்பட்டு இருந்தது.
தங்கத்தட்டில் விருந்து: திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு தங்கத்தட்டில் பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான டிஷ்களை செய்து விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினார். நடிகர் விஷால், இயக்குநர் ஏ.எல். விஜய், சாண்டி மாஸ்டர் எல்லாம் செம ஜாலியாக பங்கேற்று கலகலப்பாக்கினர் என்றும் கூறியுள்ளார்.

ஐஷு தங்கை: அக்காவின் திருமண நிகழ்ச்சி எப்படி நடக்க வேண்டும் என்றும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எப்படி வரவேண்டும் என்றும் அஞ்சனா ரொம்பவே ஆர்வம் காட்டி பார்த்துக் கொண்டது சிறப்பு என்றும் அவர் பேசியிருந்தார். நடிகர் அர்ஜுன் மற்றும் தம்பி ராமைய்யா உள்ளிட்டவர்களும் ரொம்பவே இன்ட்ராக்ட் செய்து சிறப்பாக நடத்தி முடிக்க உதவினர் என்றார்.


Click it and Unblock the Notifications











