பாலி தீவில் பேச்சுலர் பார்ட்டி.. ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் எங்கே, எப்போது நடக்கப் போகுது தெரியுமா?

சென்னை: நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் பாலி தீவில் திருமணத்துக்கு முந்தைய பேச்சுலர் பார்ட்டியில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளன.

காமெடி நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றபோது உமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் சந்திப்பு நிகழ்ந்தது.

Aishwarya Arjun Arjun

ஆரம்பத்தில் நட்பாக தொடங்கிய அந்த சந்திப்பு, பின்னர் காதலாக மலர்ந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் தற்போது திருமணம் நடைபெற உள்ளது. வரும் ஜூன் 10-ம் தேதி ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம் நடைபெற உள்ளநிலையில் தனது நண்பர்களுடன் பாலை தீவுக்கு பிரைட் பார்ட்டியை நடத்த சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Aishwarya Arjun Arjun

திருமணம் மற்றும் ரிசப்ஷன்: ஜூன் 9-ஆம் தேதி நடிகர் பிரேம்ஜிக்கு திருத்தணியில் திருமணம் நடைபெற உள்ளது. ஜூன் 10 ஆம் தேதி நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தை தொடர்ந்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பங்கேற்கும் திருமண வரவேற்பு விழா வரும் ஜூன் 14-ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் கோலாகலமாக நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Aishwarya Arjun Arjun

பாலி தீவில் ஜாலி: ஐஸ்வர்யா அர்ஜுன் தனது தங்கை மற்றும் நண்பர்களுடன் பாலி தீவுக்கு பேச்சுலர் பார்ட்டியை போல பிரைடல் பார்ட்டியை கொண்டாட சென்றுள்ளார். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் திருமணத்துக்கு முன்பாக சந்தோசமாக ஜெட் போட் ரைடு, ஏவிடி பைக் ரைடு என செம ஜாலி செய்துள்ளார் ஐஸ்வர்யா அர்ஜுன். மணமகளாக போகும் ஐஸ்வர்யா அர்ஜுனனுக்கு அவரது நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Aishwarya Arjun Arjun

பிரபலங்களுக்கு அழைப்பு: முதல் பத்திரிகையை மு.க. ஸ்டாலினுக்கு அர்ஜுன் வழங்கிய நிலையில், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் குமார் என சினிமாவில் உள்ள பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் ஆந்திர நண்பர்களையும் திருமணத்துக்கு அழைத்துள்ளார். தென்னிந்தியா முழுக்க நடிகர் அர்ஜுனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Aishwarya Arjun Arjun

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X