மறக்க முடியவில்லை.. சிரஞ்சீவி சர்ஜாவின் சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட கோலிவுட் ஹீரோயின்!

சென்னை: பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் அகால மரணம் சினிமா பிரபலங்களையும் தாண்டி பல பொதுமக்களையும் வெகுவாக பாதித்து இருக்கிறது.

Recommended Video

சிரஞ்சீவி சர்ஜா மறைவிற்கு அவர் தான் காரணம்

கர்ப்பவதியாக இருக்கும் மனைவியையும் கருவில் இருக்கும் குழந்தையை கண்ணால் காண்பதற்கு முன்னதாகவே காலன் சிரஞ்சீவி சர்ஜாவின் உயிரை காவு வாங்கி விட்டார்.

மாரடைப்பு காரணமாக மரணமடைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் மரணத்தை மறக்க முடியாமல் பிரபல கோலிவுட் நடிகை, சிருவின் சிறு வயது புகைப்படத்தை தற்போது பதிவிட்டு ரசிகர்களை உருக வைத்துள்ளார்.

திடீர் மாரடைப்பு

திடீர் மாரடைப்பு

லைஃப் இஸ் வெரி ஷார்ட் நண்பா என்றும், தனது சகோதரர்களுடன் ஆடி பாடி செம ஜாலியாக தனது குழந்தை இந்த பூமிக்கு சீக்கிரம் வரப் போகுது என்ற உற்சாகத்தில் இருந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். அவர் இறந்து ஒரு வார காலம் ஆகியும் அவரது மரண துக்கம் சினிமா உலகை விட்டுப் போகவில்லை.

கண்ணீர் வரவைத்த வீடியோ

கண்ணீர் வரவைத்த வீடியோ

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா, உள்ளிட்ட படங்களில் நடித்த மேக்னா ராஜ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 4 மாத கர்ப்பிணியான மேக்னா ராஜ், தனது காதல் கணவனின் பூத உடலை பார்த்து கட்டிப்பிடித்து அழுத வீடியோ காட்சி தென்னிந்தியாவை ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுத்து வருகிறது.

அர்ஜுன் குடும்பம்

அர்ஜுன் குடும்பம்

தனது மருமகனை இழந்த துக்கம் தாங்காமல் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தினரும் இறுதி ஊர்வலத்தில் சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுத காட்சி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்ணீர் மல்க வைத்தது. இவ்வளவு இளம் வயதில் ஒரு பிரபல நடிகர் இறந்துவிட்டாரே என்று நெட்டிசன்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வந்தனர்.

மறக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை

அர்ஜுன் மகளும் கோலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம், பல ரசிகர்களையும் நிலைகுலைய செய்து வருகிறது. சிறு வயதில் தனது அத்தை மகனுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

நடிகர் சிரஞ்சீவி சர்ஜா பற்றி என்ன சொல்வதென்றே வார்த்தை வராமல் அவரது நினைவாகவே இருந்து வாடி வரும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், வெறும் சிரஞ்சீவி என போட்டு கருப்பு நிற ஹார்ட்டினை மட்டுமே கேப்ஷனாக கொடுத்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவரது மரணம் அந்த குடும்பத்தை எந்த அளவுக்கு வாட்டி எடுத்து இருக்கிறது என்பதை உணர முடிகிறது என ஆறுதல் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X