இதுதான் நம்ம 'ஆக்ஷன் கிங்' ஃபேமிலி.. குடும்ப போட்டோவை வெளியிட்ட ஐஸ்வர்யா அர்ஜுன்!
சென்னை: நடிகர் அர்ஜுனின் குடும்ப புகைப்படத்தை நடிகை ஐஸ்வர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் முத்த மகள் ஐஸ்வர்யா. இவரை தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக்கினார் அர்ஜுன்.
விஷால் ஜோடியாக, 'பட்டத்து யானை' என்ற படத்தில் அறிமுகமானார். இதில் சந்தானம், முரளி சர்மா, ஜான் விஜய் உள்பட பலர் நடித்திருந்தனர்.

சொல்லி விடவா
2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்தப் படத்தை பூபதி பாண்டியன் இயக்கி இருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து 'சொல்லிவிடவா' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார், ஐஸ்வர்யா. இதை நடிகர் அர்ஜுன் தயாரித்து, இயக்கி இருந்தார். சந்தன் குமார் ஹீரோவாக நடித்திருந்தார்.

நடிக்காமல் இருந்தார்
சுகாசினி, பிரகாஷ்ராஜ், கே.விஸ்வநாத் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கன்னடத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படமும் பெரிதாகப் பேசப்படவில்லை. இதற்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார், ஐஸ்வர்யா அர்ஜுன்.

கலைத்து விட்டது
இந்நிலையில், ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த இருப்பதாக அர்ஜுன் கூறியிருந்தார். அதற்குள் கொரோனா அனைத்தையும் கலைத்துவிட்டது. இந்த கொரோனா காலகட்டத்தில் ஐஸ்வர்யாவுக்கும் வைரஸ் தொற்றால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனிமைப்படுத்திச் சிகிச்சைப் பெற்று அதில் இருந்து மீண்டார்.

மற்றொரு மகள்
நடிகர் அர்ஜுனின் மனைவி நிவேதிதா. ஆஷா ராணி என்ற பெயரில் கன்னடத்தில் நடித்த அவரை, நடிகர் அர்ஜுன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிவேதிதாவின் தந்தை ராஜேஷ், பிரபல கன்னட நடிகர். ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள். ஐஸ்வர்யா

குடும்ப போட்டோ
நடிகர் அர்ஜுன் பொதுவாக தனது குடும்பத்தை வெளியில் அதிகமாக அறிமுகப்படுத்துவதில்லை. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன், தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாகப் பரவி வருகின்றன.

மாதிரியே இருக்கீங்க
பல நெட்டிசன்ஸ், அழகான குடும்பம் என்று அவர்களை வாழ்த்தியுள்ளனர். சிலர் அர்ஜுன் சார், நீங்க சிரஞ்சீவி சார்ஜா மாதிரியே இருக்கீங்க என்று கூறியுள்ளனர். ஆக்ஷன் கிங் எப்போதும் ஹாண்ட்சம்தான். அவர் பிட்னஸுக்காக அவரை எப்போதும் பாராட்டலாம் என்று கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











