Aishwarya -Umapathy: இந்த மாதத்தில் உமாபதி -ஐஸ்வர்யா அர்ஜூன் நிச்சயதார்த்தம்.. எங்க நடக்குது தெரியுமா

சென்னை: பட்டத்து யானை என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பிரபல நடிகர் அர்ஜூனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜூன்.

அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தற்போது தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியை இவர் காதலித்து மணமுடிக்கவுள்ளார்.

Aiswarya Arjun & Umapathy engagement going to happening this month in chennai

ஐஸ்வர்யா அர்ஜூன் -உமாபதி நிச்சயதார்த்தம்: நடிகர் அர்ஜூன் நீண்ட காலங்களாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும தயாரிப்பாளராகவும் பன்முகம் காட்டி வருகிறார். ஹீரோவாக ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட முன்னணி படங்களில் நடித்துவந்த இவர், தற்போது கேரக்டர், வில்லன் ரோல்களில் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவர் வில்லனாக நடித்திருந்த விஜய்யின் லியோ படம் வெளியாகி வசூலில் மாஸ் காட்டி வருகிறது.

தந்தை இயக்கத்தில் ஐஸ்வர்யா: இவரது மகள் ஐஸ்வர்யா அர்ஜூன் கடந்த 2013ம் ஆண்டில் பட்டத்து யானை என்ற படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. இதையடுத்து தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான சொல்லிவிடவா படம் வெளியானது. தற்போது இவர் தனது தந்தையின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனிடையே பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை ஐஸ்வர்யா காதலித்து வந்தார்.

காதலுக்கு ஒப்புதல்: டந்த 2021ம் ஆண்டில் அர்ஜூன் நடத்திய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி கலந்துக் கொண்ட நிலையில், தன்னுடைய தந்தையின் நிகழ்ச்சியை நேரில் பார்க்க சென்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உமாபதி தமிழில் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தாரும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நடக்கும் நிச்சயதார்த்தம்: இதனிடையே இவர்களின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகவும் நிச்சயதார்த்தம் இந்த மாதத்திலேயே அர்ஜூன் சென்னையில் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் எளிமையாக நடக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரு வீட்டார் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து இரு குடும்பங்களும் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழில் முன்னணி ஹீரோவான விஷாலுக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா அர்ஜூன். முதல் படத்திலேயே இவர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது தன்னுடைய தந்தையின் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X