ஹேர்கட் பண்ணா ஓவியா ஆகிவிட முடியுமா ஐஸ்வர்யா?: அதுக்கு எல்லாம்...
சென்னை: ஹேர் கட் பண்ணினால் ஓவியா ஆகிவிட முடியுமா என்று ஐஸ்வர்யாவை பிக் பாஸ் போட்டியாளர்கள் விளாசியுள்ளார்கள்.
டாஸ்கின்போது சென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டார். அவருக்கு ஸ்டைலாக முடி வெட்டிவிட வெளியில் இருந்து ஆளை வரவழைத்தார் பிக் பாஸ்.
எனக்கு ஹேர்கட் பண்ண வேண்டும் என்று ஐஸ்வர்யா பிக் பாஸிடம் கூறி அவரின் ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளது போன்று இருக்கிறது இந்த ஹேர்கட் விவகாரம்.
ஐஸ்வர்யா
ஹேர் கட் செய்த பிறகு ஐஸ்வர்யா ஓவியா மாதிரி நடந்து கொள்ள முயற்சிப்பதாக சக போட்டியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓவியா எங்கே, நீ எங்கே என்றே தெரிவித்துவிட்டனர். சக போட்டியாளர்கள் தன்னை விமர்சிப்பதை கேட்டு அவர்களை திட்டிவிட்டு வந்து தனியாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஐஸ்வர்யா.

ஓவியா
ஐஸ்வர்யாவை ஓவியாவாக்கி பார்வையாளர்களின் வாக்குகளை பெற திட்டம் போட்டு தான் இந்த ஹேர்கட் நாடகத்தை நடத்தினாரா பிக் பாஸ் என்ற சந்தேகம் எழுகிறது. சத்தியமாக, ஐஸ்வர்யாவால் ஓவியா ஆக முடியாது. ஓவியா திமிர் காட்டினாலும் அவர் உண்மையாக இருந்தார். ஐஸ்வர்யா அப்படி கிடையாது. மேலும் ஓவியா கோபம் வந்தால் கூட பேய் மாதிரி கத்த மாட்டார்.

மாஸ்
பிக் பாஸுக்கே விளம்பரம் தேட ஓவியா தேவைப்பட்டார். தற்போது பிக் பாஸ் 2 வீட்டில் ஓவியா இல்லாமலேயே அவரை பற்றி பேசப்படுகிறது. ஆனால் ஓவியா கேரக்டர் வேறு ஐஸ்வர்யா கேரக்டர் வேறு. தலைமுடியை நறுக்கினால் ஐஸ்வர்யா ஓவியா ஆகிவிட முடியாது என்பதை பிக் பாஸ் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நெட்டிசன்ஸ்
ஐஸ்வர்யா ஹேர்கட் செய்த பிறகு ஓவியா மாதிரி இருக்கிறதே என்று நெட்டிசன்கள் பேசியது பிக் பாஸுக்கு எப்படி தெரிந்தது. உடனே போட்டியாளர்களிடம் கூறி அவர்களை ஓவியாவின் பேச்சை எடுக்க வைத்து விட்டார். மக்களே உஷார், சமூக வலைதளங்களிலும் பிக் பாஸிடம் இருந்து ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.


Click it and Unblock the Notifications











