ஐஸ்வர்யா தனுஷின் லாக்டவுன் ஒர்கவுட்.. வெளியானது ஸ்டன்னிங் போட்டோஸ்

சென்னை : சூப்பர் ஸ்டாரின் மகள், அசுர நடிகரின் மனைவி என பல முகங்களைக் கொண்ட ஐஸ்வர்யா தனுஷ் தற்போது யோகாவில் கலக்கி வருகிறார்.

திரைப்பட இயக்குனர் மற்றும் பின்னணி பாடகி என பல முகங்களை கொண்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ் தமிழ்த் திரைப்படத் துறையில் பிரபலமான ஒரு நபராக இருந்து வருகிறார்.

தற்போதுள்ள லாக்டவுன் சூழலில் பலரும் தங்களது புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில் இவர் தற்போது யோகா செய்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.

நீண்டநாள் பேசும்படி

நீண்டநாள் பேசும்படி

தமிழ்த் திரைப்படத் துறையை பொறுத்த வரையில் பெண் இயக்குனர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளது. அப்படி இயக்குனராக வலம் வரும் ஒரு சிலர் மட்டுமே தங்களது பெயரை நீண்டநாள் பேசும்படி தங்களது படைப்புகளை உருவாக்கி செல்கின்றனர் அந்த வகையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய படங்கள் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன.

நாடக கச்சேரி

நாடக கச்சேரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளாக அனைவராலும் முதலில் அறியப்பட்ட ஐஸ்வர்யா தனுஷ் திரைப்பட இயக்குனராகவும் பின்னணி பாடகியாகவும் மற்றும் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். கிளாசிக்கல் டான்ஸில் மிகவும் ஆர்வம் உடைய ஐஸ்வர்யா அதில் நன்கு பயிற்சி பெற்று சில நாடக கச்சேரிகளையும் இயற்றியுள்ளார்.

இயக்குவதில் ஆர்வம்

இயக்குவதில் ஆர்வம்

தற்பொழுது தமிழில் இப்போது உச்ச நடிகர்களில் ஒருவராக இந்திய அளவில் அண்ணார்ந்து பார்க்கப்படும் நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திரைப்படங்களை இயக்குவதில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர் முதன் முதலில் இயக்கிய படம் 3.

அதிகம் பார்க்கப்பட்ட

அதிகம் பார்க்கப்பட்ட

தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 திரைப்படம் திரையில் வெளியாவதற்கு முன்பு பல சாதனைகளை செய்து வந்தது, குறிப்பாக இந்த படத்தில் வரும் ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகெங்கிலும் ஒலித்து பல சாதனைகளை முறியடித்து இந்திய திரைப்பட பாடல்களில் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் கேட்கப்பட்ட பாடலாக ஒய் திஸ் கொலைவெறி இருந்துவந்தது.

வெற்றி பெறவில்லை

வெற்றி பெறவில்லை

அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. எனினும் ஒரு ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த 3 திரைப்படம் காதலர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

ஹீரோவாக வைத்து

ஹீரோவாக வைத்து

இவ்வாறு தான் இயக்கிய முதல் படத்திலேயே தனுஷ், சிவகார்த்திகேயன், ஸ்ருதிஹாசன், அனிருத் என பல திறமையான கலைஞர்களை வைத்து இயக்கியவர் அதைத் தொடர்ந்து வை ராஜா வை என்ற படத்தை கெளதம் கார்த்திக்கை ஹீரோவாக வைத்து இயக்கி இருந்தார்.

மாரியப்பன்

மாரியப்பன்

இவ்வாறு தொடர்ந்து படங்களை இயக்கி வந்த ஐஸ்வர்யா சமீபத்தில் மாரியப்பன் என்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரனின் வாழ்க்கை கதையை உருவாக்குவதாக செய்திகள் வலம் வந்த நிலையில் அதன் போஸ்டர்களும் வெளியாகி பலரையும் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில்

வெறும் போஸ்டர் மட்டுமே வெளியான நிலையில் இதுவரை அந்த படத்தின் படபிடிப்பு அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த லாக்டவுன் சமயத்தில் பல யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அசாத்தியமான யோகா

அசாத்தியமான யோகா

அதில் கருப்பு நிற உடற்பயிற்சி ஆடையில் தனது இரண்டு கால்களையும் ஒரு வளையத்தின் மீது தூக்கி வைத்தும் கைகள் இரண்டும் தனது முழு உடலை தாங்கி நிற்கும் அசாத்தியமான யோகா பயிற்சியை செய்து அதைப் புகைப்படமாக எடுத்து அதை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

தலைகீழாக விழுந்த Victor Arun Vijay terrific workout | Mafia, Yennai Arindhal, Sinam
அதிதி ராவ்

அதிதி ராவ்

இந்த புகைப்படத்தை பார்த்த பல இணையதளவாசிகளும் மற்றும் ஐஸ்வர்யா தனுஷின் ரசிகர்களும் பாராட்டி வரும் நிலையில் நடிகை அதிதி ராவ் இந்த புகைப்படத்தை பார்த்து வாவ் என ஆச்சரியத்துடன் கமெண்டை பதிவிட்டுள்ளார். இவ்வாறு அனைவரையும் கவர்ந்துள்ள ஐஸ்வர்யா தனுஷின் இந்த யோகா புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X