த்ரில்லர் படம்.. லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கப் போறாங்க.. ஹீரோ யாரா இருக்கும்?
சென்னை: ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியன் 2, பொன்னியின் செல்வன் என பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அடுத்ததாக ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும், இந்த படத்தின் கதையை எழுதியுள்ளது யார் என்கிற அறிவிப்பையும் லைகா வெளியிட்டு இருக்கிறது.

ரஜினி மகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு ஐஸ்வர்யா தனுஷ் ஆக மாறி உள்ளார். இயக்கத்தில் அதிக ஆர்வம் உள்ள ஐஸ்வர்யா தனுஷ் இதுவரை இரு படங்களை இயக்கி உள்ளார். இரண்டு படங்களிலும் தனுஷ் நடித்துள்ளார்.

தனுஷின் ‘3'
ஹாலிவுட்டில் வெளியான Beautiful Mind திரைப்படத்தை இன்ஸ்பிரேஷனாக கொண்டு ஐஸ்வர்யா தனுஷ் உருவாக்கிய '3' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளிக் கால காதல் காட்சிகள் அடங்கிய முதல் பாகம் அசத்தலாக நகர இரண்டாம் பாதி சிறப்பாக அமையவில்லை என்கிற விமர்சனங்கள் குவிந்தன.

அனிருத் அறிமுகம்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 3 படத்தில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கி வருகிறது.

ஒய் திஸ் கொலவெறி
கண்ணழகா, போ நீ போ என ஒவ்வொரு பாடல்களும் காதல் தேனை பிழிய சூப் சாங்காக வெளியான "ஒய் திஸ் கொலவெறி" பாடல் உலகளவில் டிரெண்டாகி தமிழ் சினிமா பாடல்களை அடுத்தடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல பாதை அமைத்தது என்றே சொல்லலாம்.

வை ராஜா வை
2012ல் '3' படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் 2015ல் கெளதம் கார்த்திக்கை வைத்து இயக்கிய வை ராஜா வை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. முதல் படத்தில் பாடல்கள் கை கொடுத்த அளவுக்கு கூட இந்த படம் சோபிக்காத நிலையில், அதன் பிறகு சினிமா படங்களை இயக்குவதில் இருந்து சில காலம் விலகி இருந்தார் ஐஸ்வர்யா தனுஷ். 2017ம் ஆண்டு சினிமா வீரன் எனும் டாக்குமென்ட்டரி படத்தை மட்டும் இயக்கி இருந்தார்.

லைகா தயாரிப்பில்
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் அடுத்ததாக லைகா தயாரிப்பில் பைலிங்குவல் த்ரில்லர் படத்தை இயக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. ரஜினியின் தர்பார் திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் தற்போது ஐஸ்வர்யா தனுஷின் புதிய படத்தை தயாரிக்க முன் வந்துள்ளது.

யாருடைய கதை
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவுள்ள புதிய படத்திற்கு சஞ்சய் என்பவர் கதை எழுதி உள்ளார் என்கிற அறிவிப்பையும் லைகா நிறுவனம் இந்த அறிவிப்பிலேயே இணைத்து கூறியிருக்கிறது. த்ரில்லர் மற்றும் ஃபேமிலி என்டர்டெயினர் என்றும் லைகா குறிப்பிட்டு இருக்கிறது.

ஹீரோ யார்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கப் போகிறார் என்றதுமே ஹீரோ தனுஷா? என்கிற கேள்வியை ரசிகர்கள் கிளப்பி உள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என பெரிய படமாக உருவாக உள்ள இந்த படத்தி நடிகர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











