இன்ஸ்டாகிராமுக்கு வந்த ஐஸ்வர்யா தனுஷ்: முதல் போட்டோ யாருடையது தெரியுமா?
Recommended Video

சென்னை: இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ள தன் மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் தனுஷ்.
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளார். கணக்கு துவங்கிய கையோடு அவர் தனது தங்கை சவுந்தர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அக்காவும், தங்கையும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
சவுந்தர்யா
இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய உடன் தன் தங்கையின் புகைப்படத்தை வெளியிட்ட ஐஸ்வர்யாவை பார்த்து வாவ், என்ன பாசமான அக்கா என்கிறார்கள் நெட்டிசன்கள்.
தனுஷ்
மனைவி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியதை ட்விட்டரில் தெரிவித்து வாழ்த்தியுள்ளார் தனுஷ்.

ஃபாலோயர்கள்
ஐஸ்வர்யா தனுஷும் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளார். அவரை ட்விட்டரில் 1.71 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ஆனால் அவர் ட்விட்டர் பக்கம் வந்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.
அண்ணி
ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் வாங்க அண்ணி வாங்க என்று வரவேற்று கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











