ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா

சென்னை : கோலிவுட்டின் முக்கியமான காதல் தம்பதிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், அவரது மனைவியும் ஒருவர். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள்.

ரஜினியும், அவரது மனைவி லதாவும் 1981 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று தங்களின் 40 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.

இதனை முன்னிட்டு மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா - பாட்டியுடன் இருக்கும் அப்பா - அம்மாவின் திருமண போட்டோவை வெளியிட்டு, அத்துடன் உருக்கமான வாழ்த்து செய்தியையும் பதிவிட்டுள்ளார்.

அப்பா – அம்மாவின் காதல்

அப்பா – அம்மாவின் காதல்

ஐஸ்வர்யா தனது பதிவில், என் அம்மா, என் அப்பாவை மட்டும் தனியாக நேசிக்கவில்லை. அவருடைய குடும்பத்தையும் சேர்த்துத் தழுவிக் கொண்டார். பதிலுக்கு என் அப்பாவும் அம்மாவின் தாய்-தந்தையை அவர்களது இறுதி நாட்கள் வரை சொந்த தந்தை, தாய் போல் பேணிக்காத்தார். உண்மையில், எனது தாத்தாவும் பாட்டியும் காவல் தேவதைகள் என நான் நம்புகிறேன். வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு திருப்பங்களிலும் அவர்கள் உங்கள் இருவரையும் பாதுகாத்து வழிநடத்தியுள்ளனர்.

உங்களிடம் கற்றுக் கொண்டேன்

உங்களிடம் கற்றுக் கொண்டேன்

திருமணம் என்பது மாறி மாறி ஒருவரது சுமையைத் தாங்குவது. உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்...இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆசையைக் காட்டிலும் பரஸ்பர பரிவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். திருமண உறவில் ஏற்படும் நட்பு நீண்டகால இணக்கத்துக்கு அடித்தளமாகிறது. அப்போதுதான் வீடு வெறும் கட்டிடமாக இல்லாமல் அன்பு நிறைந்த இல்லமாக இருக்கும்.

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினீர்கள்

வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினீர்கள்

நான் உங்கள் இருவரை மட்டுமே நேசிக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் நேசிக்கிறேன். அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையே அனைவரையும் நேசிக்கிறேன். வயதான காலத்திலும் இருவரும் இணைந்து ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி உள்ளீர்கள்" இவ்வாறு ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.

 விண்ணை தாண்டி நேசிக்கிறேன்

விண்ணை தாண்டி நேசிக்கிறேன்


மேலும் எனது அன்பான அப்பா, அம்மாவிற்கு சூப்பர் டூப்பர் திருமணநாள் வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் விண்ணைத் தாண்டி நேசிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவில் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினி - லதா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X