அப்படியே தாத்தாவை உரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யாவின் மகன்.. தீயாய் பரவும் ரஜினி பேரனின் போட்டோஸ்!

Recommended Video

Celebrity Christmas Celebration 2019 | Selvaraghavan | Iswarya Dhanush

சென்னை ஐஸ்வர்யா தனுஷின் மகன் யாத்ரா நடிகர் ரஜினிகாந்தை போன்றே இருப்பதாக நெட்டிசன்கன் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். சிறு குழந்தை முதல் வயதான பாட்டி வரை எல்லா வயதிலும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுக்கவும், சீனா, ஜப்பான், சிங்கப்பூர் என பல நாடுகளிலும் ரஜினிகாந்துக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. ரஜினி ரசிகர்களுக்கு அவரது பிறந்த நாளும் அவர் படத்தின் ரிலீஸும்தான் திருவிழா.

நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ்

ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யாவை, நடிகர் தனுஷ்க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இரண்டு மகன்கள்

இரண்டு மகன்கள்

ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

புத்தாண்டு..

புத்தாண்டு..

மூத்த மகன் பெயர் யாத்ரா, இளைய மகன் பெயர் லிங்கா. இந்நிலையில் ஐஸ்வர்யா புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

மூத்த மகன் யாத்ரா

மூத்த மகன் யாத்ரா

இந்த போட்டோக்களை போஸ்ட் பர்த்டே மூட்.. புத்தாண்டு வாழ்த்துகள் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அதில் ஐஸ்வர்யா தனுஷின் மூத்த மகன் யாத்ரா அப்படியே ரஜினிகாந்த் போன்று உள்ளார்.

ரஜினியை போல..

ரஜினியை போல..

ஐஸ்வர்யாவைவிடவும் உயரமாக வளர்ந்துவிட்ட யாத்ராவின் கண்கள், மூக்கு, முகவெட்டு, நிறம் என அனைத்தும் டிட்டோ அவரது தாத்தா ரஜினிகாந்து போன்றே உள்ளார்.

வைரலாகும் போட்டோஸ்

வைரலாகும் போட்டோஸ்

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்களும் அதையே கூறி வருகின்றனர். ஐஸ்வர்யா தனது மகன்களுடன் இருக்கும் அந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X