உடலை வில்லாக வளைத்து..அசால்டா யோகா..மிரண்டுபோன ரசிகர்கள் !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபகாலமாக பல்வேறு யோகா புகைப்படங்களை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

தமிழில் பல திரைப்படங்களை இயக்கி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த ஐஸ்வர்யா தனுஷ் தற்பொழுது பகிர்ந்துள்ள யோகா புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

திரைப் பிரபலங்கள் பலரும் ப ஐஸ்வர்யாவின் இந்த அசாத்தியமான யோகா புகைப்படங்களை பகிர்ந்ததோடு அடேங்கப்பா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பிரமிக்க வைத்து

பிரமிக்க வைத்து

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் தற்பொழுது பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி அனைவரையும் பிரமிக்க வைத்து வரும் நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் 2012ஆம் ஆண்டு 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் தனது கால்தடத்தை பதித்தார்.

சிறந்த காதல் திரைப்படம்

சிறந்த காதல் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடிக்க தவறியிருந்தாலும் காதலர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று இன்றுவரை சிறந்த காதல் திரைப்படமாக அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.

சிறந்த பாடல்

சிறந்த பாடல்

3 திரைப்படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் மிக முக்கியமாக "ஒய் திஸ் கொலவெறி" பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி உலக அளவில் மிகப்பெரிய வைரலாகி இன்றுவரை பிரபலமான பாடல்களில் ஒன்றாக ரசிக்கப்பட்டும், 2012 ஆம் ஆண்டு வெளியான பாடல்களில் சிறந்த பாடல் என பல்வேறு விருதுகளையும் ஒய் திஸ் கொலைவெறி பாடல் வென்று சாதனை புரிந்தது.

வை ராஜா வை

வை ராஜா வை

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ஒரு சிறந்த இயக்குனராக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நிலையில் அதை தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான "வை ராஜா வை" என்ற படத்தையும் இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கிடப்பில் போடப்பட்டுள்ளது

கிடப்பில் போடப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரு சில பெண் இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வலம் வரும் ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் நாயகன் மாரியப்பனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க இருப்பதாக சில போஸ்டர்கள் வெளியான நிலையில் தற்போது அது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வித்தியாசமான யோகா

வித்தியாசமான யோகா

இந்நிலையில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பல்வேறு சேலஞ்களையும் விதவிதமான புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் வேளையில் ஐஸ்வர்யா தனுஷ் வித்தியாசமான யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

கால்களை உல்டாவாக திருப்பி

கால்களை உல்டாவாக திருப்பி

சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் ஒன்றில் உடம்பை தாறுமாறாக வளைத்து ஒரு புறம் கைகளில் பந்தையும் மறுபுறம் கால்களை அப்படியே உல்டாவாக திருப்பியும் யோகா செய்து அசத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையவாசிகள் இடையே கவர்ந்து இழுக்கப்பட்டு வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலர் ஆஹா ஓஹா என புகழ்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X