கிருஷ்ணராக நடிக்கும் ரஜினி?: ஐஸ்வர்யாவின் 'ஓ மை காட்' ரீமேக்!
'ஒ மை காட்' என்ற இந்திப்படத்தின் ரீமேக்கில் ரஜினி நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாக உள்ளன. இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்க உள்ளாதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோச்சடையான் பட வேலைகளை முடிந்த உடன் இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை
அக்ஷய்குமார், பரேஷ் ராவல் நடிப்பில் ஹிட்டான படம் ‘ஓ மை காட்'. சமீபத்தில் ‘ஓ மை காட்' படத்தை பார்த்த ஐஸ்வர்யா, அதை ரீமேக் செய்ய விரும்பினார். இதையடுத்து சமீபத்தில் மும்பைக்கு சென்று அக்ஷய்குமாரை சந்தித்த அவர் படத்தை ரீமேக் செய்வது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. சில நிறுவனங்களுடன் இணைந்து அக்ஷய்குமாரின் நிறுவனமும் படத்தை தயாரித்து இருப்பதால் அவரிடம் ரீமேக் உரிமை பற்றி ஐஸ்வர்யா பேசியுள்ளார்.

கிருஷ்ணராக ரஜினி
கடவுளை நம்பாத பரேஷ் ராவல் ஒரு பிரச்னையில் சிக்குகிறார். அவரை காப்பாற்ற கிருஷ்ணர் (அக்ஷய் குமார்) பூமிக்கு வருகிறார். இதுதான் படத்தின் கரு. அக்ஷய் குமார் நடித்த கிருஷ்ணர் வேடத்தில் தனது அப்பா ரஜினியை நடிக்க வைக்க ஐஸ்வர்யா திட்டமிட்டுள்ளார்.

மூட நம்பிக்கைக்கு சவுக்கடி
படம் முழுக்க மூட நம்பிக்கைகளை தோலுரிக்கும் வசனங்கள், போலி சாமியார்களை தாக்கும் காட்சிகள் என விறுவிறுப்பாக திரைக்கதை நகரும். இதுவே இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.

விரைவில் அறிவிப்பு
‘ஓ மை காட்' படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் ஐஸ்வர்யா தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், அக்ஷய்குமாருடன் தொடர்ந்து அவர் பேசி வருகிறார். மற்ற விஷயங்கள் எதுவும் இன்னும் முடிவாகவில்லை. அவை முடிவான பின்னும் இது பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகலாம்.

3 இயக்கிய அனுபவம்
ஏற்கனவே தனுஷ், ஸ்ருதி நடிப்பில் 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. இந்த படத்தில் இருந்த ‘கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இதன் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா ஓ மை காட் படத்தை சிறப்பாக இயக்குவார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.

ஐஸ்வர்யா எதிர் சவுந்தர்யா
ஏற்கனவே ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா தனது தந்தையை வைத்து ‘கோச்சடையான்' படத்தை இயக்கி வருகிறார். இப்பொழுது தனது சகோதரிக்குப் போட்டியாக தந்தை ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா.


Click it and Unblock the Notifications











