‘பிக் பாஸ்’ புகழைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஐஸ்.. கை நிறைய படங்கள்!
பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, ஆரியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கின்றார்.
Recommended Video

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா, ஆரியுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 2வில் ரன்னர் அப்பாக வந்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்தவுடன் அவருக்கு படவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. தனது சக போட்டியாளரான மஹத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். இது தவிர, சிம்புவுடன் ஒரு படத்தில் அவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆரியும் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு:
இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

காதலுக்கு தடை:
இந்த படம் குறித்து படக்குழுவினர் கூறுகையில், "காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு. 60'களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80'களில் ஜாதி தடையாக இருந்தது. 2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது.

கவிதை நயம் கொண்ட காதல் கதை:
இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது. இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம், இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை" என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் அறிவிப்பு:
"அய்யனார்" படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஜி.மகேஷ் இசை அமைக்க, 'அண்ணாதுரை', 'தகராறு' புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் ஈ.ஆர்.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் பி. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











