பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா, ஜூலி நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியும் ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து புதிய படத்தில் இணைந்திருக்கின்றனர். படத்தின் பெயர் பொல்லாத உலகில் பயங்கர கேம்

பப்ஜி போன்ற ஒரு பயங்கர விளையாட்டில் பங்குபெறும் 5 பேர் அதில் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பது தான் இந்தப் படத்தின் கதை என்று இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.

இப்படம் காமெடியுடன் கூடிய திரில்லிங்கான படம். நயன்தாரா போல் ஐஸ்வர்யா தத்தா தான் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்களாம்.

ஐஸ்வர்யா தத்தா

ஐஸ்வர்யா தத்தா

பிக்பாஸ் சீசன் 2ன் மூலம் தமிழக இளைஞர்களிடையே அதிகமாக அறியப்பட்டவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பாக தமிழ்த் திரையுலகில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, ஆறாது சினம், சத்ரியன், அச்சாரம், பாயும் புலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும், ஒரு படமும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

பிக்பாஸ் சீசன் 2

பிக்பாஸ் சீசன் 2

புதிய படவாய்ப்புகளும் கதவை தட்டாததால், வீட்டிலேயே முடங்கியிருந்த வேளையில் தான் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று நூலிழையில் பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை இழந்தார்.

கதவை தட்டிய வாய்ப்புகள்

கதவை தட்டிய வாய்ப்புகள்

இந்த நிகழ்ச்சிக்கு பின்பு ஒரளவு பிரபலமாகிவிட்டதால், தமிழில் ஓரிரு படவாய்ப்புகள் வந்தன. அதில் கன்னித்தீவு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா, அலேகா என அடுத்தடுத்து படவாய்ப்புகள் ஐஸ்வர்யா தத்தாவுக்கு வந்தன. ஆனால் அந்தப் படங்கள் இன்னமும் வெளிவரவில்லை.

பொல்லாத உலகில் பயங்கர கேம்

பொல்லாத உலகில் பயங்கர கேம்

தற்போது பப்ஜி விளையாட்டைப் போல் மரண பயத்தை ஏற்படுத்தும் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் பொல்லாத உலகில் பயங்கர கேம் (Pollatha Ulaghil Bayangara Game-PUBG) படத்தில் ஐஸ்வர்யா தத்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநர், தாதா 87, பித்ரூ, படங்களின் இயக்குனர் .விஜய் ஸ்ரீ ஜி இயக்கும் புதிய படம் தான் இது. இப்படம் காமெடியுடன் கூடிய திரில்லிங்கான படம்.

மொட்டை ராஜேந்திரன்

மொட்டை ராஜேந்திரன்

நயன்தாரா போல் ஐஸ்வர்யா தத்தா தான் கதையின் நாயகி. மேலும் இந்த படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜிங்குற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் ப்ரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிக்பாஸ் சீசன் 1ல் புகழ் பெற்ற ஜூலியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

பப்ஜி கேம்

பப்ஜி கேம்

படத்தின் கதையை பற்றி இயக்குனர் கூறுகையில், பப்ஜி கேம் மாதிரி அஞ்சு பேரு ஒரு கேம் விளையாடுறார்கள். ஜெயிச்சவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு. அது(happy ending) அவர்களுக்கு என்ன நடக்கிறது, என்பதுதான் படம். திரையில் நடிக்காமல் நீண்ட காலம் ஒதுங்கி இருந்த சிறந்த பழைய நடிகர்களை மீண்டும் நடிக்க வைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

இயக்குநர்

இயக்குநர்

இப்படத்தின் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி ஏற்கெனவே 87 வயது சாருஹாசன் மற்றும் ஐனகராஜ் அவர்களையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த நடிகர் அம்சவர்தனை வைத்து பீத்ரு என்ற படத்தை இயக்கி வருகிறார் அதனை தொடர்ந்து தற்சமயம் பப்ஜியை இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X