For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா தத்தா,சஞ்சனா சிங் இந்தி பாடலுக்கு டான்ஸ்.. வைரலாகும் வீடியோ!

    |

    சென்னை : நடிகை ஐஸ்வர்யா தத்தா சஞ்சனாசிங் இருவரும் இணைந்து இந்தி பாடலுக்கு ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

    அலேகா,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா,பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் ஆகிய படங்களில் ஐஸ்வர்யா நடித்து வருகிறார்.

    65 மில்லியனை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் குட்டி பட்டாஸ் பாடல்! 65 மில்லியனை கடந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் குட்டி பட்டாஸ் பாடல்!

    பல திரைப்படங்களில் கிளாமர் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ள சஞ்சனா சிங் இப்பொழுது ஐஸ்வர்யா தத்தா உடன் இணைந்து ஆடிய வீடியோ இணையதளத்தை கலக்கிக் கொண்டுள்ளது.

    சிறப்புத் தோற்றத்தில்

    சிறப்புத் தோற்றத்தில்

    தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டு பிரபலமாக உள்ளவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து அறிமுகமாகி முதல் படத்திலேயே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை கவர்ந்த ஐஸ்வரியாவுக்கு அதன்பிறகு சில காலம் ஹீரோயினாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தங்கை மற்றும் சிறப்புத் தோற்றத்தில் சில படங்களில் வந்து சென்றார்.

    வயிற்றில் குழந்தையுடன் குத்தாட்டம் போடும் பிரபலங்கள் | Dance with Baby Bump | Filmibeat Tamil
    ஆரி ஹீரோவாக

    ஆரி ஹீரோவாக

    அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவருக்கும் பரிச்சயமான ஐஸ்வர்யாவுக்கு அதன்பிறகு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வர இப்போது கைவசம் அலேகா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், கன்னித்தீவு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இதில் அலேகா ரிலீசுக்கு தயாராக உள்ளது இதில் நடிகர் ஆரி ஹீரோவாக நடித்துள்ளார்.

    நீண்ட நாட்களாக நண்பர்களாக

    நீண்ட நாட்களாக நண்பர்களாக

    ரேணிகுண்டா, கோ, அஞ்சான்,தனி ஒருவன், மீகாமன் பல திரைப்படங்களில் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சஞ்சனா சிங், ஐஸ்வர்யா தத்தாவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வருகின்றனர். அவ்வப்போது நேரில் சந்திக்கும் பொழுது எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    செம க்யூட் டான்ஸ்

    செம க்யூட் டான்ஸ்

    இந்த நிலையில் இருவரும் இணைந்து இந்தி பாடல் ஒன்றுக்கு செம க்யூட்டாக ஆடிய வீடியோவை தற்போது ஐஸ்வர்யா தத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு எடுத்தது அது ஒரு மகிழ்ச்சியான தருணம் என சஞ்சனா சிங்கை அதில் டேக் செய்து குறிப்பிட்டும் உள்ளார். இப்பொழுது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    English summary
    Aishwarya Dutta and Sanjana Singh dance for Hindi tune and the video is viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X