வந்த வேலையை மட்டும் பாருங்க.. அந்த பிரபலத்தை அப்படி திட்டிய பிக் பாஸ்.. என்ன ஆச்சு தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் வீட்டின் முன்னாள் போட்டியாளர்கள் கலந்து கொண்ட அட்டகாசமான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஒவ்வொரு பிரபலங்களும் திரையில் தோன்றி, போட்டியாளர்களுக்கு செய்ய முடியாத அளவுக்கு செம டஃப் ஆன டாஸ்க்குகளை கொடுத்து ரசிகர்களை கடுப்பேற்றி விட்டனர்.

கடைசியாக வந்த பிக் பாஸ் வீட்டின் சர்வாதிகாரி ஐஸ்வர்யா தத்தா, டாஸ்க் கொடுக்காமல் சோமுக்கு ரூட் போட்டுட்டு இருந்ததை பார்த்த பிக் பாஸ், வந்த வேலையை மட்டும் பாருங்க என கண்டிப்பது போல பேசினார்.

நம்ம படம் என்னாச்சு ஆரி

நம்ம படம் என்னாச்சு ஆரி

கடைசியாக பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தித்த நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஆரியை பார்த்ததும், நம்ம படம் என்னாச்சு ஆரி, அதுக்கு எப்போ புரமோஷன் பண்ணப் போறிங்க என கேட்டார். ஐஸ்வர்யா தத்தா, லாஸ்லியா, ஆரி நடிப்பில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. வெளியே வந்ததும் படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது தான் என ஆரி பதில் அளித்தார்.

ஐஸை கண்டித்த பிக்பாஸ்

ஐஸை கண்டித்த பிக்பாஸ்

ஆரி கூட மட்டுமின்றி, சோம் கூட வேற லெவலில் கடலை போட்டு பேசிக்கிட்டு இருந்த ஐஸ்வர்யா தத்தாவை, உடனே பிக் பாஸ் குரல் கொடுத்து, எப்படி இருக்கீங்க ஐஸ்வர்யா என்று கேட்டது மட்டும் இன்றி, வந்த வேலையை பாருங்க என ஆர்டர் போட்டு திட்டவும் செய்தார். அதன் பின்னர், ஆரிக்கும் சுச்சிக்கும் டாஸ்க் கொடுத்தார் ஐஸ்.

எங்கே இருந்து கண்டுபிடிக்கிறீங்க

எங்கே இருந்து கண்டுபிடிக்கிறீங்க

வீட்டுக்கு வந்தா குழந்தைங்க ஷூவை கழட்டி சோபா மேல, டேபிள் மேல என கண்ட இடத்தில் விசிறி அடிப்பது போன்ற ஒரு டாஸ்க்கை, சுசித்ராவுக்கும் ஆரிக்கும் ஐஸ்வர்யா தத்தா கொடுத்தார். இதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், இது போன்ற அரியவகை விளையாட்டை எல்லாம் எங்கே இருந்து கண்டுபிடிக்கிறாங்களோ என தெரியவில்லை என கலாய்த்து வருகின்றனர்.

சுச்சிக்கும் ஆரிக்கும் போட்டி

சுச்சிக்கும் ஆரிக்கும் போட்டி

சுச்சியையும், ஆரியையும் போட்டியாளரா தேர்வு செய்யும் போதே, ஆரி தான் ஜெயிப்பார் என்று தெரிந்தது. அதே போல ஆரி ஷூவை வீசி டேபிள் மேல போட்டு ஜெயித்து விட்டார். நிச்சயம் வேற யாராவது ஒரு போட்டியாளர்கள் உடன் மோத விட்டு இருந்தால் நிறைய ஷூக்களை மேஜையில் மேல் வைத்து ஆரியை ஈஸியா அவுட் பண்ணியிருப்பாங்க.. ஹீரோ ஜெயிக்கணும்ல!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X