என்னம்மா டிசைன் இது.. ஆர்டர் கொடுத்து தைப்பீங்களோ.. ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோவால் ஷாக்கான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் உடையை பார்த்த நெட்டிசன்கள் விழி பிதுங்கி போயுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் முலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ரசிகர்கள் கோபம்
தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இதில் கொஞ்சம் அடாவடியாக நடந்துகொண்டதால் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார்.

அடுக்கடுக்காக வாய்ப்பு
இந்நிலையில் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிலிர் ஆகிய 5 படங்களை கை வசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஐஸ்வர்யா தத்தாவுக்குதான் வொர்க்கவுட் ஆகியுள்ளது என கூறி வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

கவர்ச்சியில் கவனம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஐஸ்வர்யா தத்தா அவ்வப்போது தனது க்யூட் அன்ட் ஹாட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். ஆடையை பற்றி கொஞ்சமும் கவலைப்படால் கவர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.

ட்ரான்ஸ்ப்ரன்ட்
இதுதான் என்று எந்த எல்லையும் இல்லாமல் செல்கிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா தத்தா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோ வேற லெவலில் உள்ளது. அதாவது உள்ளாடை மட்டும் அணிந்து அதன் மீது கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்ப்ரன்ட் மேலாடையை அணிந்துள்ளார்.
Recommended Video

என்ன டிஸைன்
இதில் அப்படியே எல்லாமே அப்பட்டமாக தெரிகிறது. ஐஸ்வர்யா தத்தாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், என்ன டிசைன் இது.. ஆர்டர் கொடுத்து தைக்க சொல்வீங்களா.. என பங்கம் செய்துள்ளனர். இன்னும் சிலர் எதற்கு இந்த உடை என்றும் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











