அடக்கடவுளே.. இந்த விசயத்துல ஐஸுவுக்கும், ஜூலிக்கும் ஒரே ராசியால்ல இருக்கு!
சென்னை: அடுத்தடுத்து ஆண் நண்பர்களால் பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர் பிக் பாஸ் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவும், ஜூலியும்.
பிக் பாஸ் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ஜூலியும், ஐஸ்வர்யா தத்தாவும். இரண்டு பேருமே மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று பிரபலமானவர்கள்.
தற்போது இவர்கள் இருவருமே பிசியாக படங்களில் நடித்து வருகின்றனர்.

ஜூலி வீடியோ:
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பர் காவலரைத் தாக்கிய சம்பவத்தில் ஜூலியின் பெயர் ஊடகங்களில் அடிபட்டது. சம்பவ இடத்தில் தான் இல்லை என ஜூலி விளக்கமளித்த போதும், நெட்டிசன்கள் பலர் அவரை கோபமாக திட்டினர். பின்னர் உருக்கமாக ஒரு வீடியோ வெளியிட்டு சர்ச்சைகளில் இருந்து தப்பினார் ஜூலி.

ஐஸ்வர்யா தத்தா:
தற்போது ஜூலி போன்றே ஐஸ்வர்யாவும் தனது ஆண் நண்பர் கோபி கிருஷ்ணனால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே அவரது நண்பரான கோபி பற்றியும், அவரது மோசடியில் ஐஸ்வர்யாவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன.

நண்பர் கைது:
இந்த சூழ்நிலையில் தற்போது பணமோசடி வழக்கில் கோபியை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்தபோது சம்பவ இடத்தில் ஐஸ்வர்யாவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அதனை அவர் மறுத்து வருகிறார்.

ஒரே ராசி:
ஆனபோதும், கோபி கைதால் விரைவில் ஐஸ்வர்யாவிடமும் போலீசார் விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அவரும் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த விசயத்தில் ஜூலிக்கும், ஐஸ்வர்யாவுக்கும் ஒரே ராசியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











