முதலில் மகத், அடுத்து சிம்புவா?: தப்பில்ல தப்பில்ல ஐஸ்வர்யா தத்தா
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா தத்தா சிம்புவிடம் சொல்லாத ஆசையை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தத்தாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகிறது. அவர் ஆரியுடன் ஒரு படம், சக பிக் பாஸ் போட்டியாளரான மகத் ராகவேந்திராவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

சிம்பு
எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ என்றால் அது சிம்பு தான். நடிக்க வரும் முன்பே எனக்கு அவரை தான் பிடிக்கும். அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் இந்த ஆசையை நான் இதுவரை சிம்புவிடம் கூறியது இல்லை என்று ஐஸ்வர்யா தத்தா தெரிவித்துள்ளார்.

நயன்தாரா
நயன்தாரா, அதிதி பாலன் ஆகியோர் எனக்கு பிடித்த நடிகைகள். அவர்கள் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

பிக் பாஸ்
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்து வெளியேறிவிட்டு மீண்டும் அங்கு சென்றபோது, இந்த வீட்டில் இருப்பவர்களில் சிம்புவுக்கு பிடித்தவர் ஐஸ்வர்யா தத்தா தான். அவரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா தான் ஹீரோயின் என்று தெரிவித்தார் அவர். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கும் சிம்புவுடன் சேர்ந்து நடிக்க ஆசை வந்துவிட்டது.

மகத்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு நடந்த பார்ட்டியில் சிம்பு ஐஸ்வர்யா தத்தா தோள் மீது கையை போட்டபடி எடுத்த புகைப்படம் வெளியானது. இந்நிலையில் ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்றி வைப்பாரா சிம்பு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











