மகள் பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகமாகிவிட்டது: கணவர் அபிஷேக்
மும்பை: மகள் ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டதாக கணவர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். மகள் ஆராத்யா ஓரளவுக்கு வளர்ந்த பிறகே மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இந்நிலையில் அவரின் கணவர் அபிஷேக் பச்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஐஸ்வர்யா
ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் அதிகரித்துவிட்டது. என்னால் மீண்டும் நடிக்க முடியுமா, பழையபடி வர முடியுமா, விட்ட இடத்தில் இருந்து தொடர முடியுமா, புகழ் பெற முடியுமா என்று ஒரே சந்தேகம் அவருக்கு.

பிரேக்
நான் நடிப்பில் இருந்து இரண்டு ஆண்டுகள் பிரேக் எடுத்தேன். என் பெற்றோரும் சரி, ஐஸ்வர்யா ராயும் சரி எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என் உணர்வுகளை புரிந்து கொண்டார்கள்.

பாலிவுட்
நான் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை. நான் நடிக்கும் படங்களின் வகையை மாற்ற நினைத்தேன். நான் நினைத்தபடி சரியான படம் கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆகின. அந்த இரண்டு ஆண்டும் என் குடும்பத்தார் எனக்கு ஆதரவாக இருந்தனர் என்றார் அபிஷேக் பச்சன்.

மன்மர்சியான்
அபிஷேக் பச்சன் தற்போது அனுராக் கஷ்யப்பின் இயக்கத்தில் மன்மர்சியான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். அனுராக், அபிஷேக் முதல் முறையாக சேர்ந்து பணியாற்றுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











