ஐஸ்வர்யா என்ன சொல்ல வராங்க … ஒன்னும் புரியல… எல்லாம் அதுக்காகத்தானா ?
சென்னை : தனுசை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா ட்விட்டரில் புத்தகம் படிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இருமகன்கள் உள்ளனர்.

பிரிந்தனர்
இணைபிரியாத தம்பதிகளாக இருந்த ஐஸ்வர்யா, தனுஷ் ஜனவரி மாதம் திடீர் என்று அறிக்கை வெளியிட்டு பிரிந்தனர். 18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவர் குறித்து சோஷியல் மீடியாவில் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், பிரிவுக்கான காரணம் குறித்து இருவரும் வாய் திறக்காமல் அமைதியாக உள்ளனர்.

மன அழுத்தத்தில்
ஐஸ்வர்யா கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மீண்டும் காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இதனால், ஐஸ்வர்யா மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் அடிக்கடி சோர்வுடன் காணப்படுவதாகவும் கூறப்பட்டது. உடலளவிலும், மனதளவிலும் ஐஸ்வர்யா பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவின.

ஆக்டிவாக
தனுவை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா, முன்பை விட சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். நேற்று, ஜிம்மில் ஒர்க் அவுட் செய்வது போல ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். தற்போது, புத்தகம் படிப்பது போல ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, தன் குழு வேலைக்காக வரும் முன்பு படிப்பதாக தெரிவித்துள்ளார்.

நீங்கள் நிம்மதியாக இல்லை
ஒவ்வொரு செயலையும் இப்படி பதிவிடுவதை நிறுத்துங்கள். நீங்கள் நிம்மதியாக இல்லை, மனதளவில் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது நன்றாக தெரிகிறது. உங்கள் குழந்தைகளுக்காக வலுவாகவும் மகிழ்ச்சியாகவும் இருங்கள் சகோதரி என ஒருவர் பதிவிட்டுள்ளார்

ஆறுதல் புத்தகம் தானே
அன்புகரம் நீட்ட ஆளில்லாம் போனால் ஆறுதல் புத்தகம் தானே! But இது ஓவர் சீனு என்று உங்களுக்கே தெரியும். ஆனால் இந்த பதிவு எல்லாம் எதற்காத்தான் என்று ஒன்றும் புரியவில்லை. குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள், மகிழ்ச்சியாக இருங்கள் என்று அனைவரும் கூறி வருகின்றனர். என்னத்தான் ஐஸ்வர்யா தனுசை விட்டு பிரிந்தாலும் அவருடன் எப்படியாவது சேர்ந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதுபோன்ற பதிவை ஐஸ்வர்யா போடுகிறார் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











