'என் மனைவி ஒரு சூப்பர் உமன்'.... ஐஸ்ஸுக்கு ஐஸ் வைத்த அபிஷேக் பச்சன்!

நடிகர் அபிஷேக் பச்சன் தனது மனைவியை சூப்பர் உமன் அழைத்தார்.

சென்னை: தனது மனைவியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், ஒரு சூப்பர் பெண்மணி என நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

உலக அழகி பட்டத்தை வென்று புகழின் உச்சியில் இருந்தவர் ஐஸ்வர்யா ராய். மணிரத்னம் இயக்கிய 'இருவர் 'படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவர், ஹாலிவுட் படங்கள் வரை நடித்து திரைத்துறையில் இன்னுமும் கோலோச்சி வருகிறார்.

இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆனார் ஐஸ். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

'ஒன் உமன் ஆர்மி'

'ஒன் உமன் ஆர்மி'

அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் ஜோடி பாலிவுட்டில் மிக முக்கியமான ஜோடி. தனது மனைவியை அவ்வப்போது புகழ்ந்து வரும் அபிஷேக், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் 'ஒன் உமன் ஆர்மி' (ஒற்றை பெண் ராணுவம்) என புகழ்ந்தார்.

சூப்பர் உமன்

சூப்பர் உமன்

இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு விழாவில் பேசிய அபிஷேக், ஐஸ்வர்யா ராயை மீண்டும் புகழ்ந்து தள்ளினார். ஐஸ்வர்யா ராய் ஒரு சூப்பர் உமன் என அவர் பாராட்டினார்.

ஐஸ்வர்யாவின் அற்பணிப்பு

ஐஸ்வர்யாவின் அற்பணிப்பு

"ஐஸ்வர்யா ராய் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும், அதில் தன்னை அற்பணித்துக்கொண்டு செய்வார். அது நடிப்பாக இருந்தாலும் சரி. தாய்மையாக இருந்தாலும். அதனால் தான் அவரை சூப்பர் உமன் என்கிறேன்" என அபிஷேக் விளக்கம் அளித்தார்.

அபிஷேக் - ஐஸ்வர்யா நடிக்கும் குலாப் ஜாமுன்

அபிஷேக் - ஐஸ்வர்யா நடிக்கும் குலாப் ஜாமுன்

அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் ஜோடி இணைந்து குலாப் ஜாமுன் எனும் படத்தில் நடிக்க இருக்கிறது. அனுராக் காஷ்யப் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அழகான கதை

அழகான கதை

குலாப் ஜாமுன் படம் குறித்து பேசிய அபிஷேக், " இது ஒரு அழகான கதை. இப்படத்தில் ஐஸ்வர்யாவுடன் இணைந்து நடிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்", எனக் கூறினார். மனைவியை பற்றி அபிஷேக் கூறிய இந்த வார்த்தைகள் விழாவில் கலந்துகொண்டவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X