ஜகமே தந்திரம் கதாநாயகியின் படுகவர்ச்சி போட்டோஸ்... பாராட்டிய பிரபல நடிகை !
திருவனந்தபுரம் : மலையாளத்தில் பிரபலமான வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் ரசிகர்களுக்கு ஆக்சன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Recommended Video
டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடித்த மாயநதி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்த நிலையில் மலையாளத்தில் அடுத்தடுத்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட மிகப் பெரிய திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டைலிஷான உடையில் படு கவர்ச்சியாக முன்னழகு தெரிய பல்வேறு கோணங்களில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் பிக்ஸ் செம சூடாக இணையத்தை கலக்கி வருவதோடு திரைப் பிரபலங்களிடம் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

பிலிம்பேர் விருது
பார்க்க மிகவும் லட்சணமாக சிறந்த நடிப்பாற்றலை கொண்டுள்ள ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் வெளியான "மாயநதி" திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதுடன் அதற்காக பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

ஆக்சன் திரைப்படத்தின்
இவ்வாறு மலையாள திரையுலகை கலக்கி வரும் ஐஸ்வர்யா லட்சுமியை தமிழ் திரைப்படங்களில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு விஷாலின் நடிப்பில் வெளியான ஆக்சன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது காலடியை பதித்தார்.

முன்னணி தமிழ் நடிகர்களுடன்
ஆக்சன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான இரண்டாம் கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஐஸ்வர்யா லட்சுமி அதில் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. தற்போது பல்வேறு முன்னணி தமிழ் நடிகர்களுடன் மிகப்பெரிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

விரைவில் வெளியாக
தமிழில் இவர் நடித்து வரும் ஜகமே தந்திரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் விரைவில் வெளியாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்து வருகிறார்.

கீர்த்தி சுரேஷ் பாராட்டு
செம க்யூட்டான மாடர்ன் உடையில், அதற்கு மேட்சாக தலையில் ஹேர்பேண்ட் அணிந்துகொண்டு, நளினத்துடன் தனது முன்னழகு தெரிகின்றவாறு வெட்கப்பட்டுக்கொண்டே பல்வேறு விதமான க்யூட்டான போஸ்களை கொடுத்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி அந்த அசத்தலான போட்டோ ஷூட் பிக்ஸ்களை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்ததோடு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











