லால் சலாம் தோல்வி..எல்லாத்துக்கு காரணம் அப்பாதான் என்று புலம்பும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?..பரபர தகவல்
சென்னை: 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா கடைசியாக லால் சலாம் படத்தை இயக்கியிருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீடு ரோலில் நடிக்க ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கிரிக்கெட்டையும், மதத்தையும் மையமாக வைத்து உருவாகியிருந்த அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் ஐஸ்வர்யா கொஞ்சம் அப்செட்டில் இருப்பதாகவே கூறப்படுகிறது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவருடன் சேர்ந்து வாழ்ந்த காலகட்டத்தில் 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அந்தப் படமும் தோல்வியையே சந்தித்தது. சூழல் இப்படி இருக்க தனுஷுக்கும், ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இன்னும் சட்டப்பூர்வமாக பிரியவில்லை.

லால் சலாம்: இந்தச் சூழலில் அவர் லால் சலாம் படத்தை தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீடு ரோலில் நடித்திருக்க; ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அவர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரை ஏற்றிருந்தார். கெஸ்ட் ரோல் என்று சொன்னாலும் படத்தில் ஒரு மணி நேரம்வரை அவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அவரும் ஸ்க்ரீனில் தோன்றியிருந்தார்.
படுதோல்வி: ரஜினிகாந்த்தின் படமாக இதனை படக்குழு ப்ரோமோட் செய்யாவிட்டாலும் பெரும் எதிர்பார்ப்பு வைத்து ரசிகர்கள் படம் பார்க்க சென்றனர். ஆனால் ரசிகர்களை திருப்திப்படுத்த படம் தவறியது. முக்கியமாக ஐஸ்வர்யாவின் மேக்கிங், திரைக்கதை என எதுவுமே எடுபடவில்லை என்று ரசிகர்கள் ஓபனாகவே விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால் படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலத்த அடி வாங்கிவிட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தை தயாரித்து லைகா கையில் சூடுபோட்டுக்கொண்டதாகவும் திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.
அப்செட்டில் ஐஸ்வர்யா: இந்தப் படத்தின் தோல்வி ஐஸ்வர்யாவை ரொம்பவே அப்செட்டாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் லால் சலாம் ஆடியோ லான்ச்சில் பேசியிருந்த அவர், "இந்தப் படம் தொடர்பான அப்டேட் வரும்போதெல்லாம் விடாமுயற்சி மற்றும் வேட்டையன் ஆகிய படங்களின் அப்டேட்டுகளைத்தான் ரசிகர்கள் கேட்டார்கள். அதை பார்க்கும்போது கஷ்டமாக இருந்தது. இப்போது சொல்கிறேன் இந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு நானும் ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பேன்" என்று முழங்கியிருந்தார்.
எல்லாத்துக்கும் அப்பாதான் காரணம்?: இந்நிலையில் ஆடியோ லான்ச்சில் அவ்வளவு பேசிவிட்டோம். ஆனால் படத்தின் ரிசல்ட் இப்படி வந்துவிட்டதே என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிவருகிறாராம் ஐஸ்வர்யா. அதுமட்டுமின்றி இன்னொரு தகவலும் கோலிவுட்டில் பரபரத்துக்கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் தனது அப்பா ரஜினிகாந்த் நடித்ததால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்துவிட்டது. முக்கியமாக இது ரஜினி படம் ஃப்ளேவர் ஒட்டிக்கொண்டது. ஒருவேளை மொய்தீன் பாய் கேரக்டரில் ரஜினிகாந்த்துக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைத்திருந்தால் படம் சொல்ல வந்த கருத்தை முழுதாக புரிந்துகொண்டு மக்கள் கொண்டாடியிருப்பார்களோ என்றும் தன்னுடைய வட்டத்தில் பேசிவருவதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
3க்கும் அப்படித்தான்: முன்னதாக, லால் சலாம் ப்ரோமோஷனுக்காக அளித்த பேட்டியில் பேசியிருந்த ஐஸ்வர்யா, 3 படத்தை 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் விழுங்கிவிட்டது. அந்தப் பாடல் படத்தின் வெற்றியை பாதித்துவிட்டது. அந்தப் பாடல் படம் பற்றிய மக்களிடம் இருந்த எண்ணத்தை மாற்றிவிட்டது. அந்தப் பாடலால் படத்துக்கு ஒரு பயனும் இல்லை என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











