கல்யாண வீட்டு பொம்மை போல் நிற்கும் ஐஸ்வர்யா லட்சமி… கடுப்பான ரசிகர்கள் !
சென்னை : ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜு ஜார்ஜ் மற்றும் வடிவுகரசி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
நீண்ட நாட்களாக படம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்கள் இப்படத்தை பார்த்து கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

மசாலா
வழக்கமான டான் திரைக்கதையாக இருந்தாலும் பல விஷயங்களை இதில் புகுந்தி மசாலா தனத்தையேற்றி ரசிகர்களுக்கு குறைவில்லாமல் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

ஹேப்பி
வழக்கம் போல தனுஷ் தனது ரசிகர்களுக்கு மன நிறைவான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நீண்ட நாள் காத்திருப்பை இத்திரைப்படம் உண்மையில் பூர்த்தி செய்துள்ளது மெச்சும்படி உள்ளது. குறிப்பாக பரோட்டாக் கடையில் மாஸ்டருன் தனுஷ் செய்யும் சம்பவம் ரசிக்கும் படி இருந்தது.

அசாத்திய நடிப்பு
மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சிவதாஸ் கதாபாத்திரத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இப்படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது சந்தோஷ் நாராயணனின் இசை, ரகிடா ரகிடா போடவைத்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கல்யாண வீட்டு பொம்மை
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக வரும் ஐஸ்வர்யா லட்சுமி , பார்ப்பதற்கு பவித்ரலட்சுமி போல இருக்கிறார். அழகாக பேசுகிறார்.. ஆனால் படத்தில் இவரது கதாபாத்திரத்திற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. கல்யாண வீட்டில் நிறுத்தி வைத்திருக்கும் அழகு பொம்மை போல பயன்படுத்தியுள்ளனர். இன்னும் அழுத்தமான ரோல் கொடுத்திருக்கலாம்.

பொன்னியின செல்வன் படத்தில்
மலையான நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தனது முதல் படத்திலேயே அறிமுக நடிகைக்கான விருதை பெற்றவர். மேலும் இவர் விஷாலின் ஆக்ஷன் திரைப்படத்தில் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்தார். மலையாளம், தமிழ் , தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் வரலாற்று சிறப்பு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











