தமிழை அடுத்து தெலுங்கில் அறிமுகமாகும் தனுஷ் பட ஹீரோயின்.. 'கோட்சே'வில் மிரட்டும் கேரக்டர்!

By

சென்னை: தமிழை அடுத்து பிரபல தனுஷ் பட ஹீரோயின், தெலுங்கில் அறிமுகமாகிறார்.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த படம், ஆக்‌ஷன். இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மலையாளத்தில், நிவின் பாலி ஜோடியாக, நண்டுகளூடெ நாட்டில் ஓரிடவேளா என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி உட்பட முன்னணி ஹீரோக்களுடன் அங்கு நடித்துள்ளார். இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

பூங்குழலி கேரக்டர்

பூங்குழலி கேரக்டர்

இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இதில், பூங்குழலி கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி. தாய்லாந்தில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார்.

பிஸ்மி ஸ்பெஷல்

பிஸ்மி ஸ்பெஷல்

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், அவர் நிவின் பாலி ஜோடியாக மீண்டும் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. படத்துக்கு பிஸ்மி ஸ்பெஷல் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குனர் ராஜேஷ் ரவி இயக்குகிறார். ஷோபியா பால் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சனு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

தெலுங்கு அறிமுகம்

தெலுங்கு அறிமுகம்

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தெலுங்கில் அறிமுகமாகிறார். தெலுங்கு ஹீரோ சத்யதேவ் அடுத்து நடிக்கும் படம், கோட்சே. கோபி கணேஷ் பட்டாபி இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி இருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. சி. கல்யாண் தயாரிக்கிறார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X